October 19, 2022
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகமான விக்டோரியா ஹாலில் மாநகராட்சி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மேயர் ஆனந்த் குமார் தலைமை வைத்தார். மாநகராட்சி ஆணையர் பிரதாப், துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகிய முன்னிலை வைத்தனர். இக்கூட்டத்தில், பள்ளிகளில் அடிப்படை வசதி செய்து தர கோரி 47 வது வார்டு அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் மேருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தரையில் அமர்த்து போராட்டம் நடத்தினார்.
திமுக கவுன்சிலர்கள் அதிமுக கவுன்சிலர் பிரபாகரனுடன் வாக்குவாதம் செய்தனர். அப்போது 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இருந்தும் நீண்டகால பிரச்சினையாக முன் வைக்கும் பிரச்சனைக்கு நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது ஏன் என மேயர் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.