• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

600 கொசு ஒழிப்பு பணியாளர்களுடன் டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க வீடு வீடாக ஆய்வு

October 17, 2022 தண்டோரா குழு

கோவை மாநகரில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க வீடு, வீடாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கோவை மாநகராட்சியின் கீழ் கிழக்கு, மேற்கு, மத்திய, தெற்கு மற்றும் வடக்கு என ஐந்து மண்டலங்களில் 100 வார்டுகள் உள்ளன.

தென்மேற்கு பருவமழை செப்டம்பர் மாதம் முடிய துவங்கியதை அடுத்து இம்மாதம் வடகிழக்கு பருவமழை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனிடையே, கோவை மாநகர் பகுதிகளில் சாலைகள், சாக்கடைகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. மேலும், வீடுகளில் குடிநீருக்காக தேக்கி வைக்கப்படும் டிரம்கள் போன்றவற்றில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மாநகராட்சி சார்பாக எடுக்கப்பட்டு வருகின்றன.

அதில், மண்டல அளவிலான அலுவலர்கள் சுகாதார துறை அலுவலர்களுடன் இனைந்து தண்ணீர் தேங்குவதை கண்காணித்து அவற்றில் கொசுக்கள் உற்பத்தியாகுவதை கண்டறிந்து தடுப்பு மருந்துகள் தெளிப்பது மூலமாக கொசு உற்பத்தியை தடுக்க வேண்டும். பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் தண்ணீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகராட்சி நிர்வாகம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘டெங்கு கொசுக்கள் உற்பத்தி ஆகுவதை தடுக்க வீடு, வீடாக ஆய்வு நடத்தப்படுகிறது. டெங்கு கொசு புழுக்கள் வீட்டில் உபயோகிக்கும் தண்ணீர் டிரம்களில் உள்ளதா? வீட்டின் மேல்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அருகில் நீர் தேங்கியுள்ளதா? என ஆய்வு நடத்தி டெங்கு கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர, வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள், அலுவலக கட்டிடங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆய்வு நடத்தப்படும்’’ என்றார்.

மேலும் படிக்க