• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜவுளித்துறை அமைப்புகள் சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு மாரியாதை

October 17, 2022 தண்டோரா குழு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள தனியார் ஹோட்டலில் பல்வேறு ஜவுளித்துறை அமைப்புகள் சார்பில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அவர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் கோவை, திருப்பூர் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு ஜவுளி உற்பத்தி அமைப்புகள் மற்றும் ஏற்றுமதியாளர் சங்கத்தினர் கலந்துகொண்டு மத்திய அமைச்சருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

அப்போது பேசிய மத்திய அமைச்சர்,’

மத்திய அரசு சார்பில் ஜவுளித்துறை மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. நான் ஜவுளித்துறை அமைச்சராக இருந்தபோது நாடு கொரோனா போன்ற பெரும் நோய் தொற்றை சந்தித்தது. அப்போது தான் பிபிஇ உடை தயாரிப்பை நாம் துவங்கினோம்.கொரோனா தொற்று குறையும்போது நாம் உலக அளவில் கொரோனா நோய் தொற்று பாதுகாப்பு உடை தயாரிப்பில் முன்னணியில் இருந்தோம். பல நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து கொடுத்தோம்.

இதுபோன்று ஜவுளித்துறை வளர்ச்சிக்கான முக்கிய காரணமாக நமது பாரத பிரதமர் அவர்கள் விளங்கி வருகிறார்.தமிழகத்தைச் சேர்ந்த ஜவுளி மற்றும் பின்னலாடை உற்பத்தியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து முன்வைத்து வந்தனர். அவை அனைத்தும் நிறைவேற்றப்பட்டது.
ஜவுளித்துறை வளர்ச்சிக்கான
எந்தவிதமான கோரிக்கையாக இருந்தாலும் மத்திய அரசிடம் கொடுங்கள். உங்களுடைய கோரிக்கைகளை பரிசீலனை செய்து அதற்கான தீர்வை காண்போம். அதுதான் பிரதமருடைய எண்ணமும் ஆகும்’ என மத்திய அமைச்சர் பேசினார்.

மேலும் படிக்க