• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

October 15, 2022 தண்டோரா குழு

கோவையில் உலக தமிழ் கூட்டியக்கம், கோயமுத்தூர் தமிழ்ச் சங்கமம் மற்றும் தமிழ்க் காப்புக் கூட்டியக்கம் இணைந்து இந்தித் திணிப்புக்கு எதிர்த்துக் குரல் கொடுக்கும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்ப்பல்கலைக்கழக,மேனாள் துணைவேந்தரும், உலகத் தமிழ்க் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளருமான, பேராசிரியர் சி.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. தமிழ்க் காப்புக்கூட்டியக்கம், தலைவர், புலவர் க.ச.அப்பாவு,கோயமுத்தூர் தமிழ்ச் சங்கமம், தலைவர், செ. துரைசாமி, செயலாளர் பூ. அ. இரவீந்திரன்,பொருளாளர் இல.மணி, கனகசுப்பிரமணி மற்றும் புலவர் கணேசன் ஆகியோர் பங்கேற்றனர்.

கோவையில் உலகத் தமிழ்க் கூட்டியக்கம், கோயமுத்தூர்த் தமிழ்ச் சங்கமம் மற்றும் தமிழ்க் காப்புக் கூட்டியக்கம் இணைந்து இந்தித் திணிப்புக்கு எதிர்த்துக் குரல் கொடுக்கும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை கோவை செஞ்சிலுவைச் சங்கம் முன்பு நடத்தியது. இதில் அனைத்துத் தமிழ் அமைப்புகளின் சார்பில் சுமார் 1500 பேர் கலந்து கொண்டனர்.

இந்தப் போராட்டமானது தமிழ்ப்பல்கலைக்கழக, மேனாள் துணைவேந்தரும், உலகத் தமிழ்க் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளருமான, முனைவர் சி.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. இப்போராட்டத்தில் பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், தமிழ்க் காப்புக்கூட்டியக்கம், தலைவர், அப்பாவு, கோயமுத்தூர் தமிழ்ச் சங்கமம், தலைவர், துரைசாமி, செயலாளர் இரவீந்திரன் மற்றும் பொருளாளர் இல.மணி மற்றும் 50-க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகளும் பங்கேற்று மத்திய மாநில அரசுகளுக்கு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

பாராளுமன்ற நிலைக்குழுவின் கீழ்க்காணும் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளக் கூடாது என ஒலி முழக்க நடைபெற்றது. சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர அடிகளார் அவர்கள் முழக்கப்போராட்டத்தைத் தொடங்கி வைத்து பேசினார்.

போராட்டத்தில் தமிழ்ப்பல்கலைக்கழக, மேனாள் துணைவேந்தரும், உலக தமிழ்ச் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளருமான, முனைவர் சி.சுப்பிரமணியம் தலைமை வகித்துப் பேசியதாவது :-

கடந்த வாரத்தில் பாராளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் உள்துறை அமைச்சர் அமித்சா தலைமையில் கூடி அலுவல் மொழி தொடர்பான அறிக்கை ஒன்றினைக் குடியரசுத் தலைவர் அவர்களிடம் வழங்கியுள்ளனர். இக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது என குடியரசுத்தலைவர், இந்தியப்பிரதமர் ஆகியோரை வலியுறுத்தி இன்று எங்களின் போராட்டம் துவங்கியுள்ளது.

“இந்திக்கு நாங்கள் எதிரியல்ல் இந்தித்திணிப்புக்குத்தான் எதிரி” இந்தித்திணிப்புக்கு எப்பொழுதும் எதிரான இயக்கமாகச் நாங்கள் செயல்படுவோம்.முன்னாள் பிரதமர் திரு. ஜவகர்லால் நேரு அவர்கள் அளித்த இந்தி பேசாத மக்கள் ஏற்றுக்கொள்ளும் வரை ஆங்கிலம் இணைப்பு மற்றும் அலுவல் மொழியாக இருக்கும் என்ற உறுதி மொழி கைவிடப்பட்டுள்ளது. ஆங்கிலம் இருக்கும் இடங்களில் இந்தி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.இந்த நிலைக்குழுவின் பரிந்துரை இதை முற்றிலும் புறந்தள்ளுபவையாகும் என்றார்.

மேலும் படிக்க