• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வால்பாறை கருமலை எல்.டி. பகுதியில் தொழிலாளர் குடியிருப்பை இடித்த மூன்று காட்டு யானைகள்

October 14, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த கருமலை எல்.டி. பகுதியில் தேயிலைத் தோட்ட தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர் சுந்தர் நேற்று நள்ளிரவு 3 மணி அளவில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த போது வீட்டை இடித்த சத்தம் கேட்டு இதனை அறிந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு அங்குள்ள பொதுமக்கள் சத்தமிட்டும் விரட்டி உள்ளனர்.இதனால் வீட்டின் கதவுகள்.ஜன்னல். உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தியது.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.தற்போது வால்பாறை பகுதியில் கடந்த வாரம் கருமலையில் உள்ள ரேஷன் கடையை உடைத்து சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதனால் வனத்துறையினர் அப்பகுதியில் உள்ள காட்டு யானையை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு குடியிருப்பு மற்றும் ரேஷன் கடை சத்துணவு கூடங்களை சேதப்படுத்தாமல் பாதுகாத்து அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க