• Download mobile app
30 Jul 2025, WednesdayEdition - 3458
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள பி.எப்.ஐ அலுவலகங்களுக்கு சீல்

October 14, 2022 தண்டோரா குழு

கோவையில் இரண்டு இடங்களில் பிஎஃப் அலுவலகங்களுக்கு அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர்.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) என்ற அமைப்பு நாட்டில் பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கடந்த மாதம் தேசிய புலனாய்வு அமைப்பு,அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது.சோதனையின் போது பலர் கைது செய்யப்பட்டு பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என தகவல் கூறப்படுகின்றது.

இதனால் பிஎப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்த ஒன்றிய உள்துறை அமைச்சகம் இந்த அமைப்புகள் 5 ஆண்டுகள் இந்தியாவில் செயல்பட தடை விதித்து உத்தரவை பிறப்பித்தது. ஒன்றிய அரசின் உத்தரவை செயல்படுத்தும் விதமாக தமிழகத்தில் பி.எப்.ஐ அமைப்புக்கு தடைவித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் செயல்பட்டு வந்த பிஎஃப்ஐ அலுவலகங்களுக்கு அதிகாரிகள் சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.ஏற்கனவே சேலம், ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் பி.எப்.ஐ அலுவலகங்ளுக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில், கோவை உக்கடம் கோட்டைமேட்டில் உள்ள பி.எப்.ஐ தலைமை அலுவலகம் மற்றும் வின்சென்ட் ரோட்டில் உள்ள அலுவலகத்துக்கு இன்று வட்டாட்சியர் சரண்யா தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனையடுத்து அந்த பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் படிக்க