• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகர காவல்துறை சார்பில் உலக மனநல நாள் விழா

October 11, 2022 தண்டோரா குழு

கோவை மாநகர காவல்துறை சார்பில் உலக மனநல நாள் விழா (World Mental Health Day) நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை மாநகர காவல் ஆணையர் . V. பாலகிருஷ்ணன், அவர்கள் அறிவுரையின்படி, கோவை ஆயுதப்படையில் பணியாற்றி வரும் காவல் அதிகாரிகள்,காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு உலக மனநல நாள் விழாவையொட்டி (World Mental Health Day) மேற்படி சிறப்பு வகுப்புகளை காவலர் நிறைவாழ்வு மேற்கு மண்டல ஒருக்கிணைப்பாளர் K. ருத்ரா , மனநல டாக்டர் B. கண்ணன், MD (PSY) எடுத்தார்கள்.

காவலர் நிறைவாழ்வு மேற்கு மண்டல ஒருக்கிணைப்பாளர் K.ருத்ரா,Emotional Management என்ற தலைப்பில் கோபமடையும் சூழ்நிலையில் எவ்வாறு புத்திசாலித்தனமாக நடந்து கொள்வது என்பது குறித்து உரையாற்றினார்.மனநல டாக்டர் B. கண்ணன் Mental Health என்ற தலைப்பில் பணிபுரியும் இடத்திலும், குடும்பத்திலும் கோபத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து உரையாற்றினார்.

இதில் ஆயுதப்படை காவல் உதவி ஆணையர் . A. சேகர், காவல் ஆய்வாளர்கள் K. கோவிந்தராஜூ,M.பிரதாப்சிங், சமூகநல ஆர்வலர் S.சிவராமகிருஷ்ணன்,காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் கலந்து கொண்டார்கள்.

மேலும் படிக்க