• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம் புதுப்பொழிவுடன் மீண்டும் திறப்பு !

October 7, 2022 தண்டோரா குழு

கோவை இரயில் நிலையம் எதிரில் தமிழ்நாடு காவல் துறை Hamilton Clubல் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம் செயல்பட்டு வந்தது. இதற்கிடையில்,புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த காரணத்தினால்,தற்காலிகமாக பொதுமக்கள் பார்வையிட அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,தற்போது மேற்கண்ட பணிகள் நிறைவடைந்துள்ளதால் இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்கு காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை அனுமதியளிக்கப்படுகிறது.
அருங்காட்சியகத்தின் முழு பயனைப் பெறக்கூடிய வகையில் இலவச “வழிகாட்டு பயணம்” ( Guided Tour)கீழ்கண்ட நேரங்களில் நடத்தப்படும்.

காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரையுலும் மதியம் 12.30 மணி முதல் 01.30 மணி வரையிலும் மதியம் 03.00 மணி முதல் 04.00 மணி வரையிலும் மாலை 05.00 மணி முதல் 06.00 மணி வரையிலும் ஓவ்வொரு வாரமும் சனி மற்றம் ஞாயிற்றுக்கிழமைகளில் Police Band , Dog Show ஆகியவை Music Band மூலம் மாலை 06.00 மணி முதல் 07.00 மணி வரை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். வார நாட்களில் இரவு 07.00 மணி முதல் 10.00 மணி வரை திறந்தவெளிப் பகுதியை கூட்டங்களுக்கும் , நிகழ்ச்சிகளுக்கும் வாடகை அடிப்படையில் கொடுக்கப்படும்.

மேலும் பார்வையாளர்களுக்கு கட்டணமாக ஒரு நபருக்கு ரூ 10 மட்டும் வசூலிக்கப்படும் எனவும் , இதில் அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பார்வையாளர்கள் கட்டணம் இலவசம் எனவும் , அரசு சாரா மற்ற தனியார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவியர்களுக்கு பார்வையாளர்கள் கட்டணமாக ஒரு நபருக்கு ரூ .5 மட்டும் வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்பட்டுள்ளது

இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பொதுமக்கள் மற்றும் பள்ளி,கல்லூரி மாணவ மாணவியர்கள் பயன்பெறுமாறு கோவை மாநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க