• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தொண்டாமுத்தூர் அருகே இரும்பு கதவை உடைத்துச் சென்ற காட்டு யானை

October 7, 2022 தண்டோரா குழு

கோவை தொண்டாமுத்தூர் அருகே விவசாய தோட்டத்திற்கு புகுந்த ஒற்றைக் காட்டு யானை அங்கிருந்த இரும்பு கதவை உடைத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள தாளியூர் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த 2 மாதங்களுக்கு முன் விவசாய நிலங்களுக்குள் சுமார் 10 யானைகள் கொண்ட யானை கூட்டம் உள்ளே சென்று அட்டகாசம் செய்து வந்தது. இந்நிலையில் வனத்துறையினர் அந்த யானை கூட்டங்களை மதுக்கரை வனப்பகுதிக்கு விரட்டினர்.

இந்நிலையில் நேற்று இரவு தாளியூர் பகுதிக்கு வந்த ஒற்றைக் காட்டு யானை அடுத்தடுத்து மூன்று தோட்டங்களுக்குள் புகுந்து வாழை, தக்காளி,கீரை ஆகியவற்றை சேதப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து நாகராஜ் என்பவரது தோட்டத்திற்கு புகுந்த யானை அங்கிருந்த பயிர்களை சேதப்படுத்திவிட்டு வெளியே வர முயன்றது. அப்போது தோட்டத்தை சுற்றியும் சோலார் விண்வெளிகள் அமைக்கப்பட்டதால், அங்கிருந்த இரும்பு கதவை உடைத்துக் கொண்டு யானை வெளியே வந்தது.இதை அடுத்து நரசிபுரம் சாலையில் நடந்து சென்று வனப்பகுதிக்குள் புகுந்தது.

ஒற்றைக் காட்டு யானை இரும்பு கதவை உடைத்து வெளியே செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க