• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரேஸ்கோர்ஸில் மழைநீரை நிலத்துக்குள் அனுப்பும் திட்ட பணி 95 சதவீதம் நிறைவு

October 1, 2022 தண்டோரா குழு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பகுதியில் அலங்கார வளைவுகள், பூங்காக்கள் அமைப்பது, மிதிவண்டி நடைபாதை அமைப்பது போன்ற பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இதில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் சேகரமாகும் மழைநீரை நிலத்துக்குள் அனுப்பும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து இப்பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ரேஸ்கோர்ஸ் சாலையில் அமைக்கப்படும் மிதிவண்டி பாதையின் கீழே இந்த வடிகால் அமைக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் சேகரமாகும் மழைநீர் இந்த வடிகால் வழியாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்து, அருகே நாங்கள் அமைக்கும் சுத்திகரிப்பு தொட்டிக்கு சென்று சுத்தமாகி நிலத்துக்குள் மீண்டும் செல்லும். மழைநீர் சேமிப்பை அரசு வலியுறுத்தி வருகிறது. மழைநீர் சேமிப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்படுகின்றன. இப்பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க