• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நீர் தேக்கப் பகுதிகளில் உள்ள மதகுகள் சரிபார்க்கப்பட வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்

September 30, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சமீரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி பேசியதாவது:

கோவை மாவட்டத்தில் பல்வேறு நீர் தேக்கப் பகுதிகளில் உள்ள மதகுகள் சரிபார்க்கப்பட வேண்டும். பல்வேறு அணைக்கட்டு பகுதிகளில் உள்ள மதகுகள் சிதளம் அடைந்துள்ளது. ஷட்டர்கள் பழுது பார்க்கப்பட வேண்டும். பரம்பிக்குளம் ஆழியார் போன்ற ஷட்டர் விபத்துக்கள் தவிர்க்கப்பட வேண்டும். நீர் ஆதாரப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்.

தமிழகத்தில் நெல் உற்பத்தி செலவு ஒரு குவிண்டாளுக்கு ரூ.1805 ஆகிறது. கேரளாவில் நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு குவிண்டகளுக்கு ரூ. 2820 கேரளா அரசு தற்சமயம் அறிவித்துள்ளனர். அதே போல் தமிழகத்தில் நெல் விவசாயிகளுக்கு ரூ.2820 வழங்க வேண்டும். கோவை மாவட்டத்தில் நெடுஞ்சாலை மற்றும் கிராம பொது பாதைகளில் ஓரமாக பயன்படுத்தாத கிணறுகள், விவசாயத்துக்கு பயனுள்ள கிணறுகள் உள்ளது.

குறிப்பாக காரமடை ஒன்றியம், தொண்டாமுத்தூர், புத்தூர், தேவராயம்பாளையம் போகும் வழியில் உள்ள கிணறுகள் பாதுகாப்பாக இல்லாத நிலையில் சாலை விபத்துகள் ஏற்படுகிறது. அரசு உடனடியாக சாலையோரம் உள்ள கிணறுகளை சுற்றி பாதுகாப்பு தடுப்பு அமைக்க வேண்டும். தமிழகத்தில் வனப்பரப்பு அதிகரிக்க பசுமை தமிழகம் இயக்கம் கோவைக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க