• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிஎஸ்ஜி கலை & அறிவியல் கல்லூரி சார்பில் உலக சுற்றுலா தின விழா

September 30, 2022 தண்டோரா குழு

பி.எஸ்.ஜி கலை & அறிவியல் கல்லூரி, விருந்தோம்பல் மேலாண்மைத் துறையின் உலக சுற்றுலா தின விழா GRD அரங்கத்தில் நடைபெற்றது.

கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் A அங்குராஜ் அவர்கள் வரவேற்பு நல்கினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் பிருந்தா விழாவில் தலைமையுரையாற்றினார்.
தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர் Dr. M. மதிவேந்தன் விருந்தோம்பல் மேலாண்மைத் துறை உலக அளவில் அதிக வருவாய் மற்றும் வேலைவாய்ப்பளிக்கும் துறை என்று குறிப்பிட்டார்.

சுற்றுலாத் தளங்கள் மற்றும் காலநிலை கோவையின் சிறப்பம்சங்களை சுட்டிக்காட்டினார். மேலும் சுற்றுலாத்துறையை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து நடவடிக்கையெடுத்து வருவதாகவும், இதுவரை இல்லாத வகையில் புதுமையாக சுற்றுலா மற்றும் சுற்றுலா மேம்பாட்டுத்துறை சிறப்புத்திட்டங்கள் மூலமாக தமிழ்நாடு ஹோட்டல்களைப் புதுப்பிக்கப்பட்டு வருவதையும் குறிப்பிட்டார். இன்னும் சில மாதங்களில் அனைவரும் வியக்கும் வண்ணம் பல அறிவிப்புகள் வரவுள்ளதாகவும் தெரிவித்தார்.

சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை கல்வி மேம்பாட்டிற்கு வித்திட்டவர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்தார்.மேலும் சுற்றுலா தினப் போட்டிகளில் வென்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவச் செல்வங்களுக்குப் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்.மேலும் விருந்தோம்பல் துறை மாணவர்களால் நடத்தப்படும் “Let’s Tour” கல்லூரி வளாக நிறுவனத்தை குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார்.

இவ்விழாவில் பிஎஸ்ஜி கல்வி நிறுவனங்களின் பல்வேறு ஆட்சிக்குழு உறுப்பினர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் முதலியோர் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தார்கள்.
நிறைவாக விருந்தோம்பல் மேலாண்மைத் துறைத் தலைவர் S. ஜெகதீசன் நன்றியுரையாற்றினார்.

மேலும் படிக்க