• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்களுக்கு தேர்வு

September 28, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் பல்வேறு துறைகளிலுள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. குரூப் (பி) மற்றும் குரூப் (சி) பிரிவில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பணிக்காலியிடங்களின் எண்ணிக்கை இருபதாயிரம் ஆகும்.

இதில் உதவி பிரிவு அலுவலர், உதவி கணக்கு அலுவலர், ஆய்வாளர் (சிபிஐ), உதவி ஆய்வாளர், இளநிலை புள்ளியியல் அலுவலர், இன்கம்டேக்ஸ் இன்ஸ்பெக்டர், ஆடிட்டர், மேல்பிரிவு எழுத்தர் உள்ளிட்ட 35 வகையான பணிக்காலியிடங்கள் போட்டி தேர்வு மூலம் நிரப்பப்படவுள்ளன. இத்தேர்வுக்கான கல்வித்தகுதி பட்டப்படிப்பாகும்.

இத்தேர்வுகளுக்கான உச்ச பட்ச வயது வரம்பு 01.01.2020 அன்றுள்ளபடி குறிப்பிட்ட பதவிகளின் அடிப்படையில் 27, 30, 32 ஆகும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை உண்டு. இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள் அக்டோபர் 8ம் தேதி ஆகும். தேர்வுக்கட்டணம் ரூ.100. பெண்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கு தேர்வுக் கட்டணம் கிடையாது.

இதற்கான முதற்கட்ட தேர்வு டிசம்பர் மாதம் நடத்தப்படவுள்ளது. இலவச பயிற்சி வகுப்புகள் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சியின் போது இலவச பாடக்குறிப்புகள் முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் வழங்கப்படுவதுடன், அனேக மாதிரித்தேர்வுகளும் நடத்தப்படும்.
இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அக்டோபர் 1ம் தேதி அன்று பிற்பகல் முதல் பயிற்சி வகுப்பு தொடங்கப்படவுள்ளது..

இப்பணியிடத்திற்கு விண்ணப்பித்து இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மையத்தினை தொடர்பு கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் படிக்க