கோவை மாவட்டத்தில் ஏழு ஊராட்சி தலைவர்களின் காசோலை பயன் படுத்தும் அதிகாரம் மாவட்ட ஆட்சித் தலைவரால் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, வட்டார வளர்ச்சி அலுவலகர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் சோமயம்பாளையம் ஊராட்சி தலைவர் ரங்கராஜ் மற்றும் அசோகபுரம் ஊராட்சி தலைவர் ரமேஷ், காரமடை ஒன்றியம் மருதூர் ஊராட்சி தலைவர் பூர்ணிமா ரங்கராஜ் மற்றும் சிக்கதாசம் பாளையம் ஊராட்சி தலைவர் விமலா, அன்னூர் ஒன்றியம் குன்னத்தூர் ஊராட்சி தலைவர் கீதா தங்கராஜ், மதுக்கரை ஒன்றியம் மலுமிச்சம்பட்டி ஊராட்சி தலைவர் பழனியம்மாள், ஆனைமலை ஒன்றியம் தென் சித்தூர் ஊராட்சி தலைவர் செல்வநாயகம் என மேற்கண்ட ஏழு ஊராட்சி மன்றத் தலைவர்கள் மீது பிளிச்சிங் பவுடர் வாங்கியதில் முறைகேடு, கிருமி நாசினி தெளித்ததில் கூலி வழங்கியதில் முறைகேடு, கட்டிட வரைப்பட பதிவேட்டின் படி ஊராட்சி மன்ற ஊராட்சி மன்ற அங்கீகாரம் வழங்காமல் 100க்கும் மேற்பட்ட கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு, மின் கட்டணம் செலுத்துவதில் முறைகேடு, குடிநீர் பராமரிப்பு பொருட்கள் வாங்கியதில் முறைகேடு போன்ற பல்வேறு புகார்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே இந்த ஏழு ஊராட்சி தலைவர்களின் காசோலை பயன் படுத்தும் அதிகாரம் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனால் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகர்களிடம் வழங்கப்பட்டுள்ளது .
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு