• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மருதம் கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்கம் – ரூ.9.10 கோடி இலக்கு

September 27, 2022 தண்டோரா குழு

கோவை வ.உ.சி பூங்கா அருகில் உள்ள மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை கலெக்டர் சமீரன் துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் தலைவர் ஏ.வி.வெங்கடாஜலம், நிர்வாகக்குழு இயக்குநர் எஸ்.பி.ரமேஷ், அந்தியூர் மண்டல மேலாளர் வெற்றிவேல், மேலாளர் (வடிவமைப்பு மற்றும் உற்பத்தி) நந்தகோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் சமீரன் கூறியதாவது,

தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ், கடந்த 87 ஆண்டுகளாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து, இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக சந்தைப்படுத்தி, நெசவாளர்களுக்கு பேரூதவி புரிந்து வருகிறது.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் பட்டு ரக உற்பத்தியில் பாரம்பரியமாக ஈடுபட்டு வருகிறது. காஞ்சிபுரம், சேலம், கோவை, ஆரணி, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுச்சேலைகள் வாடிக்கையாளர்களின் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் காலத்திற்கேற்ற புதிய வடிவமைப்பான மென்பட்டு சேலைகளையும் கோ-ஆப்டெக்ஸ் அறிமுகப்படுத்தி வருகிறது. தீபாவளி சிறப்பு விற்பனைக்காக கைத்தறி ரகங்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் அனைத்து விறபனை நிலையங்களிலும் 30 சதவீதம் அரசு சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது.

கோவை மாவட்டத்தில் மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்திற்கு இந்தாண்டு ரூ.5.15 கோடியும், ஆர்.எஸ்.புரம் விற்பனை நிலையத்திற்கு ரூ.55 லட்சமும், காந்திபுரம் விற்பனை நிலையத்திற்கு ரூ.85 லட்சமும், வண்ணமலர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்திற்கு ரூ.1.05 கோடியும், ஸ்ரீபாலமுருகன் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்திற்கு ரூ.75 லட்சமும், பொள்ளாச்சி விற்பனை நிலையத்திற்கு ரூ.75 லட்சமும் என மொத்தம் ரூ.9.10 கோடி தீபாவளி விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் கைத்தறி துணிகளை வாங்கி பயன்பெற்று நெசவாளர்களுக்கு வாழ்வாதாரம் பெருக்கிட உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க