• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் பி.எப்.ஐ., நிர்வாகி ஒருவர் கைது.!

September 26, 2022 தண்டோரா குழு

கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசும்போது..

கோவை மாநகரில் வி கே கே மேனன் சாலையில் உள்ள பாஜக அலுவலகத்தில் கடந்த 22ஆம் தேதி சுமார் 8:30 மணி அளவில் நடந்த எரிபொருள் வீச்சு வழக்கில் உடனடியாக காவல்துறை இரண்டு பிரிவில் வழக்கு பதிவு செய்திருந்தது.சம்பவம் தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம் 153a, 285 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து மூன்று தனிப்படை அமைத்து புலன் விசாரணை மேற்கொண்டோம்.இந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், தொழில்நுட்ப அடிப்படையில் புலன் விசாரணை, சாட்சிய விசாரணை என நடைபெற்ற விசாரணை அடிப்படையில் சதாம் உசேன் என்ற நபரை துடியலூர் பகுதியில் கைது செய்தோம்.
அவருடன் வந்தவரை தேடி வருகிறோம். சதாம் உசேனை விசாரணைக்கு பின் நீதிமன்ற காவலில் உட்படுத்துவோம்.

இவர்கள் எப்படி திட்டம் இட்டு சம்பவம் செய்தார்கள். இதில் வேறு யாராவதுக்கு சம்பந்தம் உள்ளதா என்ற அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம் 436, எக்ஸ்ப்லோசிவ் வழக்குகளை இத்துடன் இணைத்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சதாம் உசேன் பி.எப்.ஐ-யில் துடியலூர் பகுதி பொறுப்பாளராக உள்ளார்.

ஏற்கனவே இவர் மீது வழக்கு உள்ளது. அதையும் விசாரித்து வருகிறோம்.இதுவரை மாநகரில் மூன்று வழக்குகளை கண்டுபிடித்தோம்.
அதேபோல இவர்களுக்கு நூறடி சாலையில் நடந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் படிக்க