• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எஸ்பிபி வனத்தின் இரண்டாவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா

September 26, 2022 தண்டோரா குழு

கோவை பேரூர் அடுத்த பச்சாபாளையத்தில் உள்ள எஸ்பிபி வனத்தின் இரண்டாவது ஆண்டு நிறைவு விழா விழாவை முன்னிட்டு, மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது.

கோவை மாவட்டம், பேரூர் அடுத்த பச்சாபாளையம் பகுதியில், சிறுதுளி அமைப்பின் சார்பாக மறைந்த முன்னாள் பாடகர் எஸ் பி பி யின் நினைவாக எஸ்பிபி வணம் என்று, அமைக்கப்பட்டு, அங்கு அடர்வனம் முறையில் மரங்களை நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது, எஸ்பிபி நினைவு நாளான செப்டம்பர் 25 ம்தேதியை நினைவு கூறும் விதமாக இன்று செப்டம்பர் 24ஆம் தேதியான இன்று மாலையில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகள் சிறுதுளி அமைப்பின் இயக்குனர் வனிதா மோகன், மாநகராட்சி ஆணையர் பிரதாப், வருமானவரித்துறை அதிகாரி குமார், என பலரும் கலந்து கொண்டு மரங்களை நட்டனர், மேலும் கூடுதல் சிறப்பாக எஸ் பி பி யின் சிலைக்கு மலர் தூவி அஞ்சலியினை செலுத்தினர், பின்னர் அவரது நினைவாக, பராமரிக்கப்பட வருகின்ற அடர்வன பூங்காவை சுற்றி பார்த்து, அவரது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து இசைக் கருவிகள் தயாரிப்பதற்கு தேவைப்படுகின்ற மர வகைகளை, இங்கு நட்டனர், பின்னர் எஸ்பிபியின் நினைவுகளை எடுத்து கூறும் விதமாக எஸ் பி பி யின் பாடல்களை பாடி அனைவரும் கேட்டு ரசித்தனர், இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டடோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க