• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அண்ணாமலை வன்முறை தூண்ட கூடிய வகையில் பேசுகிறார் – ரா முத்தரசன்

September 26, 2022 தண்டோரா குழு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ரா முத்தரசன் சிரியன் சர்ச் சாலையில் உள்ள ஜீவா இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

எம்பி ஆ ராசா சனாதன குறித்து பேசியதை இந்து மதத்தை பற்றி பேசியதாக கலவரத்தை உண்டாக்க பார்க்கின்றனர்.அண்ணாமலையை பார்த்து பகிரங்கமாக கேட்கிறேன்.
மத்திய அரசின் 6ஆம் வகுப்பு பாட திட்டத்தில் சனாதன பற்றி உள்ளது.இதில் படத்தோடு மேல் ஜாதி, கீழ் சாதி என உள்ளது.

மத்திய அரசு இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்,இதனை நீக்கவில்லை என்றால் ,இந்த பாட திட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சியினர் எரிக்க வேண்டிய சூல்நிலை வரும்.சட்ட ஒழுங்கை சீர்குலத்து. தற்போது உள்ள ஆட்சியை கவிழ்க்க பாஜக மேற்கொண்டுள்ளது.

பெட்ரோல் குண்டு வீச்சு ,நடைபெற்ற அனைத்து இடத்திலும் உண்மையை கண்டறிந்து ,எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்றாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அக்டோபர் 2ஆம் தேதி,காந்தியை சுட்டு கொண்ட அந்த அமைப்பை சேர்ந்தவர்களுக்கு பேரணி நடத்த சென்னை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அண்ணாமலை வன்முறை தூண்ட கூடிய வகையில் பேசுகிறார்.இவரது பேச்சு சமூக விரோதிகளுக்கு ஊக்கமாளிப்பதாக உள்ளது.
தேசிய பஞ்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கடந்த 3மாதங்களாக சம்பளம் கொடுக்கப்படவில்லை,இதனை கவனத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க