• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரூ.3.88 கோடி மோசடி வழக்கில் தனியார் நிதிநிறுவன சொத்துக்களை ஏலம் விட நீதிமன்றம் உத்தரவு

September 24, 2022 தண்டோரா குழு

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் சிவசுவாதி அபிலாஸ் என்ற தனியார் நிதிநிறுவனம் செயல்பட்டு வந்தது. கடந்த 2000ம் ஆண்டில் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு பணம் கொடுக்காமல் மோசடி செய்யப்பட்டது. இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ரூ.125 பேரிடம் ரூ.3 கோடியே 88 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து இந்த நிறுவனத்தை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். அத்துடன் அவர்களிடம் இருந்து மொத்தம் 21 சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் போலீசார் பறிமுதல் செய்த சொத்துக்களில் 19 சொத்துக்களை ஏலம் விட நிதிநிறுவனத்தை சேர்ந்தவர்கள் சென்னையில் உள்ள உயர்நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றனர். இதன் காரணமாக இந்த வழக்கு நிலுவையில் இருந்தது.

இந்நிலையில் மீண்டும் அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததன் விளைவாக, 19 சொத்துக்களை ஏலம் விட இருந்த தடை ஆணை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அந்த சொத்துக்களை ஏலம் விட நடவடிக்கை எடுக்கக்கோரி கோவையில் உள்ள டான்பிட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி ரவி, தனியார் நிதிநிறுவனத்திடம் இருந்து பறிமுதல் செய்த 19 சொத்துக்களையும் மாவட்ட வருவாய் அதிகாரி ஏலம் விட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் படிக்க