• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கல்லூரி மாணவர்களுக்கு ஐடி துறையில், பயிற்ச்சியுடன் கூடிய பணி வழங்கும் குவின்டேஷன்ஸ்

September 9, 2022 தண்டோரா குழு

கல்லூரி மாணவர்களுக்கு ஐடி துறையில், பயிற்ச்சியுடன் கூடிய பணி வழங்கும் வகையில், ஹோப்ஸ் பகுதியில் உள்ள டைடல் பார்கில் குவின்டெசென்ஸ் பிஸ்னஸ் சொல்யூசன்ஸ் எனும் ஐடி நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள முன்னனி கல்லூரிகளில் பயின்ற, மாணவர்களை ஐடி துறையில் பயிற்சியுடன் கூடிய வகையில் பணி வழங்கும் வகையில் இன்று கோவை ஹோப்ஸ் பகுதியில் உள்ள, டைடல் பார்க் பகுதியில், குவின்டெசென்ஸ் பிஸ்னஸ் சொல்யூசன்ஸ் மற்றும் சர்விஸ் பிரைவேட் லிமிடெட் என்ற ஐடி நிறுவனத்தின் புதிய கிளை துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட, ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர்
சித்ரா, ரிப்பன் வெட்டியும், குத்துவிக்கேற்றி வைத்து நிறுவனத்தை பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய,இந்நிறுவனத்தின், துணை நிறுவனர், மற்றும் முதன்மை செயல் அதிகாரி,
நிர்மல் குமார்,

அமெரிக்க நாட்டில், வாழுகின்ற, மக்கள் தங்களது மருத்துவ செல்வுகளை 90 சதவீதத்திற்க்கும் அதிகமானோர், இன்சூரன்ஸ் முறையிலே சிகிச்சை பெற்று வருகின்றனர், அவ்வாறு பயணடையும், நோயாளிகளின், செலவீனங்கள், அவர்களுக்கு அளிக்க படும் சிகிச்சை முறைகள், அதற்க்கு இன்சூரன்ஸ் நிறுவனம் அளிக்கும் ஒப்புதல் பொன்ற பணிகளை, அவர்கள் சமர்பிக்கும் ஆவணங்களை சரிபார்த்து, இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து பணத்தை மருத்துவமனைக்கு பெற்று தரும் பணிகளை இங்கு செய்து வருவதாகவும், இந்திய நாட்டுடன் ஒப்பிடுகையில், அமேரிக்க நாட்டில், இன்சூரன்ஸ் அனைத்தும் சிகிச்சைக்கு பின்னரே அதன் மதிப்பீடுகளை ஆய்வு செய்ய முடிகின்றது, இதனடிப்படையில் இங்கு இரவு, பகல் என இரு கால நிலைகளில், பணியாற்ற இந்த கிளை துவங்கபட்டுள்ளது.

இங்கு 240 முதல் 250க்கும் மேற்கொண்ட கல்லூரி மாணவர்கள் பணியமர்த்தபட உள்ளதாகவும், அதில் 70 சதவீதம், கல்லூரி மாணவர்கள் என்றும் அவர்களுக்கு இங்கு முறையான பயிற்சி அளிக்க பட்டு அவர்களின் திறமைக்கு ஏற்ற ஊதியம் வழங்க பட உள்ளது, என்றார்.

இதற்காக கோவையில் பல்வேறு கல்லூரிகளில் ஒப்பந்தம் நடைபெற உள்ளது, என்றும் மேலும் பெண்களுக்கு அதிக அளவில் வாய்ப்புகள் அளிக்க உள்ளதாகவும், இந்த பணிகளுக்கு பெண்கள் மிக சரியாக பணியாற்றும் தகுதியுடையவர்கள் என்று நம்புவதாகவும் அவர் தெரவித்தார்.

மேலும் படிக்க