• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஈஷா-விற்கு எதிரான அவதூறு செய்திக் கட்டுரையைத் முடக்க VICE மீடியா குழுமத்திற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

September 9, 2022 தண்டோரா குழு

கடந்த செவ்வாயன்று,விஜயவாடா 2-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம், அமெரிக்காவை சேர்ந்த VICE மீடியா LLC-ன் மூத்த நிருபர் பல்லவி பண்டிர் ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக எழுதிய அவதூறான ஆன்லைன் செய்தி கட்டுரையின் URL-ஐ, அடுத்த உத்தரவு வரும் வரை முடக்கி வைக்குமாறு உத்தரவிட்டது.

இந்த வழக்கை வருகின்ற 23 செப்டம்பர், 2022 அன்று நீதிமன்றம் விசாரிக்கும்.ஈஷா அறக்கட்டளை மற்றும் சத்குரு மீது தவறான, ஜோடிக்கப்பட்ட,பொய்யான மற்றும் சரிபார்க்கப்படாத பல குற்றச்சாட்டுகளை கட்டுரையாக வெளியிட்ட VICE ஊடக குழுவிற்கும் அதன் மூத்த நிருபருக்கும் எதிராக ஈஷா அறக்கட்டளை மற்றும் ஈஷா அவுட்ரீச் செப்டம்பர் 1 அன்று அவதூறு வழக்கு தொடுத்ததை அடுத்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜூன் 23 தேதியிட்ட செய்தி, தவறான தகவல்கள் மற்றும் அவதூறுகளால் நிறைந்துள்ளது என்று ஈஷா அறக்கட்டளை வாதிட்டது. உண்மையை அணுகுவதற்கான நேர்மையான முயற்சி எதுவும் இல்லை. கட்டுரையில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்பதை நிரூபிக்கும் ஆர்.டி.ஐ.களின் அதிகாரபூர்வ பதில்கள், நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் பொதுத்தளத்தில் உள்ள சம்பந்தப்பட்ட துறையின் ஆவணங்கள் உட்பட தேவையான அனைத்து ஆவணங்களையும் ஈஷா அறக்கட்டளை வழங்கியது.

பல்லவி பண்டிர் மற்றும் வைஸ் மீடியா எல்.எல்.சி.க்கு ஈஷா சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்து, வெளியிடப்பட்ட கட்டுரையை முழுவதுமாக திரும்பப் பெறவும், இதுபோன்ற பொய்யான அறிக்கைகளையும், அப்பட்டமான தவறான தகவல்கள் வெளியிடுவதை நிறுத்தவும் மற்றும் தவறான தகவலை வெளியிட்டதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவும் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

ஈஷா அனுப்பிய சட்டப்பூர்வ நோட்டீஸ் க்கு வைஸ் (VICE) ஊடகத்தினரிடம் இருந்து முறையான பதில் ஏதும் வராததால், பத்திரிகை என்ற பெயரில் செய்தியாளர் மற்றும் வைஸ் மீடியா குழு பத்திரிகை நெறிமுறைகளை தவறியதையும் தவறான தகவல்கள் அளிப்பதையும் அதன் வாசகர்களுக்கு அம்பலப்படுத்த, ஈஷா அறக்கட்டளை நீதிமன்றத்தை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மேலும் படிக்க