• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வால்பாறை தனியார் தோட்டத்தில் புலிகள் மற்றும் கரடி நடமாட்டம்

September 1, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிகளில் காட்டுயானை -புலி -கரடி – சிறுத்தை – கரு சிறுத்தை- புள்ளி மான் – வரையாடு மற்றும் அபூர்வகையான பறவைகள் உள்ளன.

வனப்பகுதி ஒட்டி தனியார் தேயிலை தோட்டம் பகுதிகள் நிறைந்தது என்பதால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளது,வனத்துறையினர் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சவரங்காடு தேயிலை தோட்டத்தில் இரண்டு புலிகள் சென்றதை அப்பகுதி பொதுமக்கள் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. மேலும் பகலில் புலிகள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் ஒளிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க