• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அனைவருக்கும் பொதுவான முதல்வர் ஏன் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை – வானதி சீனிவாசன்

August 31, 2022 தண்டோரா குழு

கோவை காந்திபுரம் 48 வது வார்டில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 15 லட்சம் மதிப்பீட்டில் நவீன அங்கன்வாடி மையம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

அங்கன்வாடி மையங்களுக்கு கூடுதலாக கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அத்தொகுதிகளில் உள்ள 10 முக்கிய கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்குமாறு முதல்வர் தெரிவித்ததன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தெற்கு தொகுதிக்குட்பட்ட 10 முக்கிய பிரச்சனைகளை அளிக்க உள்ளதாகவும் குறிப்பாக மழையினால் சேதம் அடைந்த பகுதிகளான லங்கா கார்னர் அவிநாசி மேம்பாலம் ஆகிய இடங்களும் குறிப்பிடுவதாக தெரிவித்தார்.

மேலும் விநாயகர் சதுர்த்தி முதல்வர் வாழ்த்து தெரிவிக்காதது குறித்து பேசிய அவர் கட்சியின் தலைவராக ஸ்டாலின் வாழ்த்துக்களை கூறவில்லை என்றாலும் மாநிலத்தின் முதல்வராக அவர் வாழ்த்து தெரிவித்திருக்க வேண்டும்.

இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்காமல் உள்ளதாகவும் கூறினார். பொள்ளாச்சியில் நடைபெற்ற தி.மு.க நிகழ்ச்சியில் பா.ஜ.க வினர் தி.மு.க வில் இணைந்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் தி.மு.க வில் மாற்றுக் கட்சியினர் இணைவது போல எங்கள் கட்சியிலும் தி.மு.க விலிருந்து பலரும் இணைந்து வருவதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க