• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கற்பகம் செவிலியர் கல்லூரி முதலாமாண்டு மாணவிகளின் உறுதி மொழி ஏற்கும் விழா

August 30, 2022 தண்டோரா குழு

கோவை கற்பகம் செவிலியர் கல்லூரி முதலாமாண்டு மாணவிகளின் விளக்கு ஏற்றி உறுதி மொழி ஏற்கும் விழா முனைவர் ரா வசந்தகுமார் நிர்வாக அறங்காவலர் மற்றும் முனைவர் முருகையா தலைமை நிர்வாக அதிகாரி ஆசியுடனும் கல்லூரி முதல்வர் சுதா வழிகாட்டுதலின் படியும் இன்று நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வர் வரவேற்புரை ஆற்றினார். இவ்விழாவில் கோவை மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் மருத்துவர் அருணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்.

அவர் பேசுகையில்,

செவிலியர்களுக்கு முறையான கருத்து பரிமாற்றம் திறனின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.மருத்துவர்கள் அருண்குமார், வீரகேசரி,நிர்மலா தேவி கலந்து கொண்டு முறையே தத்தம் வாழ்த்துகளை மாணவிகளுக்கு தெரிவித்தனர்.விழாவில்,கடந்த கல்வியாண்டில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கும் மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணாக்கர்களுக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

பேராசிரியர் மேரி ரீனா நன்றியுரை ஆற்றினார். இது கல்லூரியின் 14 வது மாணவ சேர்க்கை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க