மேற்கு வங்க மாநிலம், பர்த்வான் மாவட்டத்தில் உள்ள கல்சி என்னும் கிராமத்தில், கள்ளச் சாராயம் குடித்து 6 பேர் உயிரிழந்தனர். 3௦ பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.
இது குறித்து காவல்துறை அதிகாரி செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை (ஜனவரி 2) கூறியதாவது:
மேற்கு வங்க மாநிலத்தில் பர்த்வான் மாவட்டத்தில் உள்ள ராம்கோபால்பூர் என்னும் கிராமத்தில் கள்ளச் சாராயம் குடித்து ஆபத்தான நிலையில் பர்த்வான் மருத்துவமனை மற்றும் புர்ஷா மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி அவர்களில் 6 பேர் உயிரிழந்தனர். 3௦ பேர் உயிருக்குப் போராடி வருகின்றனர். அவர்களில் 18 பேருடைய நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளோம். விரைவில் சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்வோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது