• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் மேற்படிப்பிற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

August 20, 2022 தண்டோரா குழு

சந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 25ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு ‘மாணவர்களின் மேற்படிப்பிற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி’ நடைபெற்றது.

கோவை கொடிசியா அருகே உள்ள சந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ‘மாணவர்கள் மேற்படிப்பிற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி’ நடைபெற்றது.

இதனை பள்ளியின் தாளாளர் டாக்டர் ஆர்.நந்தினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். சந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் உமா வரவேற்புரை வழங்கினார்.

“இன்றைய மாணவர்கள் நாளைய சமுதாயம்” என்ற நோக்கத்தோடு 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விண்வெளி ஆராய்ச்சி துறை, மனிதவள மேம்பாட்டு துறை, பட்டைய கணக்கியல் துறை, இயற்கை மருத்துவம், விவசாயம், சட்டக் கல்லூரி, பாதுகாப்பு படைகள், போட்டி தேர்வுகள் என பல்வேறு துறை சார்ந்த கல்வியாளர்கள் மாணவர்களிடையே விரிவுரையாற்றினர். மேலும் 20க்கும் மேற்பட்ட கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், கல்வி கலைக்கூடங்கள் என பல்வேறு துறை சார்ந்த கல்விக் களஞ்சிய அரங்குகள் மாணவர்களின் வழிகாட்டுதல் நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்தது.

இதில் கோவையைச் சார்ந்த 15க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சியில் மாணவர்கள் கலந்து கொண்டு தன்னார்வத்திறனை வெளிப்படுத்துவதோடு புதியதொரு இளைய சமுதாயம் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்நிகழ்வு நடைபெற்றது.இதில் பல்வேறு துறை சார்ந்த கல்வியாளர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர் உமா, உதவி தலைமை ஆசிரியர் சீலா மற்றும் ஆசிரியர்கள் பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க