• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வி செயலி பயன்படுத்தி ரயில்வே குரூப் டி தேர்வுக்கு தயாராகுங்கள்!

August 16, 2022 தண்டோரா குழு

இளைய தலைமுறை இந்தியர்கள் மத்திய மற்றும் மாநில அளவிலான பல்வேறு அரசுத் தேர்வுகளுக்காகத் தயாராகுவதையும் அவற்றில் சிறந்து விளங்குவதையும் ஊக்குவிப்பதில் உறுதி கொண்டுள்ளது வி தங்களது வாடிக்கையாளர்கள் சிறப்பான எதிர்காலத்தைப் பெற உதவும் வகையில், இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு சேவை நிறுவனமான வி, பரிக்ஷா உடன் கூட்டுச் செயல்பாட்டை மேற்கொண்டுள்ளது.

இதன் மூலம் 2022 ஆகஸ்ட் 17 அன்று தொடங்கவுள்ள அகில இந்திய ரயில்வே டி பிரிவு தேர்வுகளுக்கான முன்னேற்பாட்டு மாதிரித் தேர்வுகளை வழங்குகிறது.வி வாடிக்கையாளர்கள் அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் செயல்முறையை எளிதாக்கும் வகையில், மத்திய / மாநில அரசு வேலைவாய்ப்புகளை விரும்பும் ஆர்வலர்களுக்கு ‘பரிக்ஷா பாஸ்’ ஒரு மாத இலவச சந்தாவை வழங்குகிறது வி வேலைவாய்ப்பு மற்றும் கல்வி மாநில தேர்வு ஆணையம், வங்கி,ஆசிரியர்,பாதுகாப்பு, ரயில்வே தேர்வுகள் உட்பட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த 150-க்கும் மேற்பட்ட தேர்வுகளுக்கான வரையறையற்ற மாதிரித் தேர்வுகளும் இதில் அடங்கும்.

இந்த இலவச சந்தா காலம் முடிந்ததும், இதே தளத்தில் சேவைகளைப் பெற ஆண்டுச்சந்தாவாக ரூ.249 செலுத்த வேண்டும்.வி செயலியில் இருக்கும் ரயில்வே குரூப் டி தேர்வு தொகுதிகள், இந்திய ரயில்வேயில் உள்ள லெவல்-ஐ ட்ராக் மெயிண்டனர் கிரேடு-ஐஏ, ஹெல்ப்பர் / அசிஸ்டெண்ட், அசிஸ்டெண்ட் பாயிண்ட்ஸ்மேன் உள்ளிட்ட 1 லட்சம் வேலைவாய்ப்புகளுக்கு இந்திய இளையதலைமுறை தயாராகும் வாய்ப்பைத் தருகிறது.வி செயலியில் உள்ள வி ஜாப்ஸ் மற்றும் எடுகேஷன் தளம் மூலமாக, பல கட்ட ஆய்வுகளுக்குப் பின் தயாரிக்கப்பட்ட மாதிரித் தேர்வுத்தாள்களை எந்த நேரமானாலும் எங்கிருந்தாலும் வி வாடிக்கையாளர்கள் பெறலாம்.

வி செயலியில் ஆர்ஆர்பி குரூப் டி மாதிரித் தேர்வுத்தாள்களைப் படிப்படியாக பெறுவதற்கான வழிமுறை:

• படி 1: உங்களது வி எண் மூலமாக வி செயலியில் லாக் இன் செய்யவும்

• படி 2: ‘வி ஜாப்ஸ் மற்றும் எடுகேஷன்’ எனும் பட்டனை கிளிக் செய்யவும்

• படி 3: அரசு வேலை எனும் பொருள்படும் ‘சர்காரி நாக்ரி’ என்பதனை தேர்வு செய்யவும்

• படி 4: உங்களைப் பற்றிய தகவல்களைப் பூர்த்தி செய்து ரயில்வே என்பதனை தேர்வு செய்யவும்

• படி 5: ரயில்வே வேலை வாய்ப்பு பிரிவுகளில் இருந்து தேர்ந்தெடுக்கவும்

வி செயலியில் உள்ள வி ஜாப்ஸ் மற்றும் எடுகேஷன் ஆனது இந்தியாவின் மாபெரும் வேலை தேடல் தளமான ‘அப்னா’, முன்னணி ஆங்கில கற்றல் தளமான ‘என்குரு’, அரசு வேலைவாய்ப்பு தேர்வுகளுக்கு தயார்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்று விளங்கும் ‘பரிக்ஷா’ ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது

மேலும் படிக்க