• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொடிசியா சார்பாக எலக்ட்ரோடெக் கண்காட்சி 3 நாட்கள் நடக்கிறது

August 10, 2022 தண்டோரா குழு

கொடிசியா சார்பாக எலக்ட்ரோ டெக் 6 வது பதிப்பு கண்காட்சி கோவை கொடிசியா வளாகத்தில் வரும் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக எலக்ட்ரோ டெக் கண்காட்சி துணைத்தலைவர் பொன்ராம், கொடிசியா தலைவர் திருஞானம், செயலாளர் சசிகுமார் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

இதில் அவர்கள் பேசியதாவது:

எலக்ட்ரோடெக் 2022 கண்காட்சியில் கேபுள்கள் மற்றும் கண்டக்டர்கள், கெப்பாசிட்டர்கள், டீசல் ஜெனரேட்டர்கள், மின் மற்றும் மிண்ணணு பாகங்கள், எனர்ஜீ மீட்டர்கள், எர்த் மற்றும் மின்னல் தடுப்பு சாதனங்கள், மின் மாற்றிகள், யூ.பி.எஸ், இன்வெர்ட்டர்கள் மற்றும் பேட்டரிகள், சோலார் பேனல்கள் என எலக்ட்ரீக்கல் தொடர்பான பல்வேறு சாதனங்கள் இடம்பெற உள்ளன. மேலும் எலெக்ட்ரிக் வாகனங்களின் உதரிபாகங்கள், சார்ஜீங் போன்றவைகள் குறித்தும் கண்காட்சியில் இடம்பெற உள்ளன.

இக்கண்காட்சியின் மூலம் உற்பத்தியாளர்கள், ஆலோசகர்கள், தொழில்முறை ஒப்பந்ததாரர்கள், தொழில் அமைப்புகள், மின்சார முறைமையாளர்கள், நிதி நிறுவனங்கள், தனியார் மின் உற்பத்தியாளர்கள், வணிகர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் உள்ளிட்ட பலர் பயன்பெற உள்ளனர்.

இக்கண்காட்சிக்கு சிறப்பு விருந்தினராக உள்நாட்டு தயாரிப்பு மற்றும் சுயசார்பு மையம், இந்திய கப்பற்படை தலைவர் கமோடர் பாலசுந்தரம், கெளரவ விருந்தினராக க்ளாஸ்டர் கேபில்ஸ் லிட் , நிர்வாக இயக்குநர் ஆஷிஷ் மோடி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

மேலும் 210 பங்கேற்பாளர்கள், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், டெல்லி, கேரளா, தமிழகம், உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வர உள்ளனர்.

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 25 ஆயிரம் பார்வையாளர்கள் வர உள்ளனர். இணையதளம் மூலம் இதற்கான பதிவு நடக்கிறது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கருத்தரங்கங்கள் நடைபெற உள்ளது. இக்கண்காட்சி மூலம் ரூ. 800 கோடி வர்த்தகம் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இக்கண்காட்சியின் சிறப்பு அம்சமாக மரபு சார் ஆற்றல் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மின்வாகன பயன்பாடு 10 கிலோ வாட் சோலார் பேனல் பொருத்துதல் மற்றும் மின்வாகன மின்னோட்டம் பற்றிய நேரடி செயல் விளக்கம் இந்திய அரசின் எம்எஸ்எம்இ அமைச்சகத்தின் மூலம் மானியத்துடன் சிறுகுறி மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பங்கேற்பு ஆகிய நிகழ்வுகள் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.

மேலும் படிக்க