இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுக்கான கவுன்சில், தமிழ்நாடு மண்டல அளவிலான தடகளப் போட்டியை, கடந்த 1 மற்றும் 2 தேதிகளில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடத்தியது.சென்னை சிஷ்யா இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.
தமிழ்நாடு மண்டலத்தில் இருந்து 43 பள்ளிகளைச் சேர்ந்த 930 மாணவர்கள் பங்கேற்றனர்.ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவரும், கோல்கீப்பராக ஓய்வு பெற்றவருமான முனீர் சேட், இப்போட்டிகளை துவக்கி வைத்தார்.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்று, திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெற ஒத்துழைத்தனர்.59 தங்கம், 37 வெள்ளி, 23 வெண்கல பதக்கங்களைப் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கோத்தகிரி புனித ஜூட் பப்ளிக் பள்ளி பெற்றுள்ளது.
சப்-ஜூனியர்,ஜூனியர், சீனியர் ஆகிய நிலைகளில் மாணவர்களும், மாணவிகளும் வென்றது அனைவருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்தது.சப்-ஜூனியர் பிரிவில் மாணவர் எஸ்.சர்வேஸ், ஜூனியர் பிரிவில் மாணவர்கள் ஆர்.பிரஜித், எஸ்.சவான், ரெஜினால்ட், சீனியர் பிரிவில் மாணவர்கள் ரோஹித், விஷ்ணுபிரியன், சீனியர் மாணவி எம்.கரீஷ்மா ஆகியோர் தனி சாம்பியன்ஷிப் பட்டங்களைப் பெற்றனர்.அசைக்க முடியாத ஜூடியன்ஸ் 119 பதக்கங்களுடன் ஒட்டுமொத்த சாம்பியனாக திகழ்ந்தது.புனேவில் வரும் நவம்பர் 3-ம் தேதி துவங்கும் தேசிய தடகளப் போட்டியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 63 பேரில் 38 தட கள வீரர்களுக்கு இத்தருணம் பெருமைப்படக்கூடியதாக அமைந்தது.
மாணவர்களின் அளப்பரிய முயற்சி பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளது. பள்ளி முதல்வர் டாக்டர் பி.பி.தனராஜன், முதல்வர் டாக்டர் சரோ தனராஜன், செயல் இயக்குநர் டாக்டர் சம்ஜித் தனராஜன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தினர்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு