• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஃபேஷன் ஷோ

August 8, 2022 தண்டோரா குழு

கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஃபேஷன் ஷோ நடைபெற்றது.இதில் அம்மா சேவா சேரிட்டபிள் ட்ரஸ்டின் நிறுவனரும் பிரபல நடிகரும் அனைவராலும் வள்ளல் சக்கரவர்த்தி என அழைக்கப்படும் பிரதீப் ஜோஸ் கலந்து கொண்டார்.

கோவையில் மாற்றுத் திறனாளிகளுக்கான அமைப்பு மற்றும் டி க்ரனோஸ் ஆகியோர் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான விருது வழங்கும் விழா மற்றும் ஃபேஷன் ஷோ, நடைபெற்றது.கோவை ஹிந்துஸ்தான் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இதில்,சிறப்பு அழைப்பாளர்களாக , இதில் பிரபல நடிகர்,அம்மா சேவா சேரிட்டபிள் டிரஸ்டின் நிறுவனர்,சமூக சேவகர் பொதுமக்களால் வள்ளல் சக்கரவர்த்தி என அழைக்கப்படும் பிரதீப் ஜோஸ் மற்றும் சர்வதேச திருமதி அழகி பட்டம் வென்றவரும்,தன்னம்பிக்கை பேச்சாளர்,அம்மா சேவா சேரிட்டபிள் டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர் சோனாலி பிரதீப்,மற்றும் முக்கிய பி்முகர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட பிரதீப் ஜோஸ் மாற்றுத்திறனாளிகளை ஊக்கபடுத்தும் விதமாக மேடையில் பாடி அசத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர்,

மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்கும் விதமாக கோவை அம்மா சேரிட்டபிள் ட்ரஸ்ட் தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை வழங்க உள்ளதாக தெரிவித்தார்.பின்னர் ,மாற்றுத்திறனாளிகளுக்கான ஃபேஷன் ஷோ மற்றும் பல்வேறு துறைகளில் சாதித்த மாற்றுத்திறனளிகளுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தனர்.

பின்னர் அவர்களுடன் இணைந்து பிரதீப் ஜோஸ் மற்றும் சர்வதேச திருமதி அழகி பட்டம் வென்ற சோனாலி பிரதீப் ஆகியோர் மாற்றுத்திறனாளி களுடன் மேடையில் ஒய்யார நடை நடந்து அசத்தினர். மாற்றுத் திறனாளிகளுக்கென நடைபெற்ற இந்த ஃபேஷன் ஷோ, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த‌து. இதில், தேசிய மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் சாதித்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

அவர்கள், பிரபல மாடல் அழகிகளுடன், ராம்ப் வாக் மற்றும் வீல் வாக் செய்தனர். வண்ண ஒளியில் மாற்றுத்திறனாளி வீரர்கள் மேடையில் தோன்றியது, அங்கிருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

மேலும் படிக்க