இடப்பிரச்சினையை தீர்த்து தருவதாக கூறி சென்னை தொழில் அதிபரிடம் மோசடி செய்ததாக கோவை செல்வபுரம் போலீசார் கடந்த 2ம் தேதி இந்து மக்கள் கட்சியின் ஜோதிடர் பிரிவு மாநில செயலாளர் பிரசன்ன சுவாமிகள் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இதை தொடர்ந்து கடந்த 3 ம் தேதி பிரசன்ன சுவாமிகள்,தனது மனைவி அஸ்வினி, தாய் கிருஷ்ணகுமாரி மற்றும் 11 வயது மகள் உள்ளிட்டோருடன் பூச்சி மருந்து உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதில் அவரது தாயார் கிருஷ்ணகுமாரி அன்றைய தினமே உயிரிழந்த நிலையில் மூன்று பேருக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று இரவு சிகிச்சை பலனின்றி பிரசன்ன சுவாமிகள் உயிரிழந்தார். மேலும் இருவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு