• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குமரகுரு கல்லூரியில் பட்டமளிப்பு விழா !

August 6, 2022 தண்டோரா குழு

குமரகுரு நிறுவனங்களின் பட்டமளிப்பு விழா 06 மற்றும் 07 ஆகஸ்ட், 2022 ஆகிய நாட்களில் மூன்று அமர்வுகளாக நடைபெறுகிறது.இதில் 2019 மற்றும் 2020 தொகுதியைச் சேர்ந்த 2900க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டங்களை பெற்ற உள்ளனர்.

குமரகுரு வளாகத்தில் உள்ள இராமணந்த அடிகளார் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பிஇ,பிடெக், பாடப்பிரிவு மாணவர்களுக்கு முதல் நாளன்றும் , எம்இ , எம்டெக், எம்பிஏ மற்றும் எம்சிஏ பாடப்பிரிவு மாணவர்களுக்கு இரண்டாம் நாளன்றும் பட்டம் வழங்கப்பட்டது.

குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் சரவணன் மாணவர்களை வரவேற்று பேசினார்.

நிறுவனத்தின் இணை தாளாளர் ஸ்ரீ சங்கர் வாணவராயர் தனது பட்டமளிப்பு உரையில்,

வாழ்க்கையில் ஒரு முக்கியத்துவத்தை உணர்ந்து தொடர்ந்து அது தரும் படத்தை கற்று முன்னேறும் லத்தியதுடன் இருப்பது ஒரு சிறந்த வெற்றிக்கு சரியான வழித்தடமாக இருக்கும் எனக் கூறினார்.

மேலும், நிறுவனர் அருட்செல்வர் டாக்டர்.நா.மகாலிங்கம் ஐயா அவர்களின் நூற்றாண்டு விழாவில் அஞ்சலி செலுத்தும் வகையில், பட்டதாரிகளை அவரது தொலைநோக்கு பார்வை மற்றும் நோக்கத்துடன் இணைத்து, தேசத்தின் மகத்தான வளர்ச்சிக்கு பங்களிக்க ஊக்குவித்தார்.

குமரகுரு நிறுவனங்களின் தாளாளரும் பட்டமளிப்பு விழாவின் தலைவருமான எம் .பாலசுப்ரமணியம் பட்டங்களை வழங்கினார்.இந்த இரண்டு நாட்களில் மொத்தம் 2927 மாணவர்கள் பட்டம் பெற்றனர். 2019 ஆம் ஆண்டில் தேர்ச்சி பெரும் 1296 மாணவர்களில் 217 பேர் முதல் வகுப்பில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

அதேபோல் ,2020-ம் ஆண்டில் தேர்ச்சி பெரும் 1422 மாணவர்களில் அதில் 272 பேர் முதல் வகுப்பில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

மேலும் படிக்க