• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு ஆட்சியரிடம் மனு

August 1, 2022 தண்டோரா குழு

இது தொடர்பாக அவர்கள் அளித்துள்ள மனுவில்,

கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு மீன்வள உதவி இயக்குநர் ஒதுக்கித் அவரின் பரிந்துரையின் பெயரில் 2019-2023 வரை 11 குளங்களை தந்துள்ளீர்கள்.நாங்கள் மீன் குஞ்சு இருப்பு செய்து மீன்பிடித்து வருகிறோம்.இந்த குளங்களை நம்பி 500 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. தற்போது குளங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உக்கடம் பெரியகுளம் வாளாங்குளம் ஆகிய இரு குளங்களில் டீசல் போர்ட் விடுவதற்காக பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

நாங்கள் பெடல் போர்ட் விடுவதாக எண்ணினோம் தற்போது டீசல் போர்ட் விடுவதால் குளத்தில் உள்ள மீன்களில் டீசல் மற்றும் பெட்ரோல் வாசம் வரும், இதனால் குளங்களில் சேல் போர்ட் மற்றும் பெட்ரோல் போர்ட் விடுவதை தவிர்க்கவும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகமண்டலத்தில் உள்ள ஏரியில் டீசல் போர்ட் பயன்படுத்தியதால் மீன்கள் டீசல் வாசத்தினால் விற்பனை செய்ய முடியாத சூழ்நிலையில் உள்ளது.

நாங்கள் இதற்கு முன்னால் 13.08.2019 அன்று இது தொடர்பாக தங்களிடம் புகார் மனு அளித்துள்ளோம்.எனவே,மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்ளுகிறோம் என்றனர்.

மேலும் படிக்க