• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஓடு கல்விக்காக கை கொடு’எனும் மாரத்தான் போட்டி

July 31, 2022 தண்டோரா குழு

கோவையில் ஸோ அவேர் (So Aware) மற்றும் நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக ‘ஓடு கல்விக்காக கை கொடு’எனும் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

கோவையில்,ஸோ அவேர் (So Aware) உடன் நண்பர்கள் அறக்கட்டளை மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்பினர் இணைந்து ஓடு கல்விக்காக கை கொடு எனும் தலைப்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது..நண்பர்கள் அறக்கட்டளையின் நிறுவன தலைவர் கீர்த்தி கமலேஷ்,மற்றும் So Aware அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுரஜித் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இப்போட்டியை, தமிழக சிறப்பு காவல்துறை நான்காவது பட்டாலியன் கமாண்டன்ட் செந்தில் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கோவை புதூர் பிரதான மைதானத்தில் துவங்கிய இதில் பத்து,ஐந்து,மூன்று கிலோ மீட்டர்கள் என பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது.ஆண்கள்,பெண்கள்,சிறுவர்,சிறுமிகள், முதியோர் என வயது வித்தியாசமின்றி நூற்றுக்கும் மேற்பட்டோர் போட்டியில் ஆர்வமுடன் கலந்து கொண்டு ஓடினர்.தொடர்ந்து இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

இது குறித்து போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் கீர்த்தி கமலேஷ் மற்றும் சுரஜித் ஆகியோர் கூறுகையில்,

கடந்த இரண்டு வருடங்களில் கொரோனா பெருந்தொற்று நோயால்,பெற்றோரை இழந்து பலர் ஆதரவன்றி தவித்து வருகின்றனர். இவ்வாறு ஆதரவற்ற குழந்தைகளின் கல்வி உதவிக்கு நிதி திரட்டுவதற்காக இந்த போட்டியை நடத்தி உள்ளதாகவும், இதில் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க