• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கோலாகலமாக துவங்கியது தேசிய கார் பந்தயம்!

July 29, 2022 தண்டோரா குழு

கோயம்புத்தூர் ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் இந்திய மோட்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளுப்புகளின் கூட்டமைப்பு நடத்தும் நான்கு சக்கர வாகனங்களுக்கான ‘ப்ளூ பேண்ட் தேசிய ரேலி சாம்பியன்ஷிப் 2022’ன் இரண்டாம் சுற்று போட்டிகளை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கோவை ஜென்னீஸ் ரெசிடெண்சியில் கொடி அசைத்து துவக்கி வைத்தார். உடன் மாட்டின் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் லீமா ரோஸ் பிஎஸ்ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

போட்டியின் சாம்பியன்ஷிப் மற்றும் சேலஞ்ச் பிரிவுகளில் பங்கேற்கும் 54 கார்கள் ஒன்றின் பின் ஒன்றாக பந்தயம் நடைபெறும் களங்களுக்கு சென்றது. முன்னதாக ஜென்னீஸ் ரெசிடெண்சியில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.இதில் இந்த ரேலியை விளம்பரப்படுத்தும் ப்ளூ பேண்ட் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மண்ட் நிறுவனத்தின் இயக்குனர்கள் ராமகிருஷ்ணன் மற்றும் பிரேம்நாத், பந்தய வீரர்கள் கௌரவ் கில், கர்ணா கடூர், ஆதித்யா தாக்குர், பாபிட் அமர், ஷிவானி ப்ருத்வி மற்றும் சாம்ராட் யாதவ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கோவையில் செயல்படும் தங்கள் நிறுவனம் இந்த சிறப்புமிக்க கார் பந்தயத்தை கோவையில் இந்த ஆண்டு நடத்துவது தங்களுக்கு பெருமிதமாக இருப்பதாக ப்ளூ பேண்ட் நிறுவனத்தின் இயக்குனர் பிரேம்நாத் கூறினார்.

இந்த பந்தயம் நிச்சயமாக ஒரு மறக்கமுடியாத அனுபவத்தை தரும் என்று தான் நம்புவதாகவும், வரும் காலங்களில் இந்த விளையாட்டுக்கு மக்களிடையே பேராதரவு அதிகம் கிடைக்கும் எனவும் தான் உறுதியாக நம்புவதாக கூறி, அணைத்து வீரர்களுக்கும் ப்ளூ பேண்ட் சார்பில் தன் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய வீரர் கவுரவ் கில், இம்முறை பந்தயத்தில் உள்ள இரண்டு ஸ்டேஜுகளில் மென்மையான, கரடுமுரடான இரண்டு தடங்கள் இருப்பதால் நிச்சயம் வாகனத்தை ஓட்டும் போது இந்த இரு தடங்களுக்கு ஏற்ப ஒரு ஓட்டுனர் தன் சமநிலையை சீராக வைக்கவேண்டியிருக்கும் என்றார்.

கார் பந்தயம் நாளை, நாளை மறுநாள் (ஜூலை 30, 31) வெள்ளலூர் ஜி ஸ்கொயர் சிட்டி அருகே அமைக்கப்பட்டுள்ள பந்தய சாலையிலும், கேத்தனூர் பகுதியில் உள்ள காற்றாலை பண்ணையில் அமைக்கப்பட்டுள்ள பந்தய சாலையிலும் நடைபெறும். வெற்றிபெறும் வீரர்களுக்கு ஞாயிறு பிற்பகல் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.

மேலும் படிக்க