• Download mobile app
16 Oct 2025, ThursdayEdition - 3536
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தன் பிரசவத்தை பேஸ்புக்கில் லைவில் பகிர்ந்த இங்கிலாந்து பெண் !

January 2, 2017 தண்டோரா குழு

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய பிரசவத்தை பேஸ்புக்கில் லைவ் செய்து பகிர்ந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ஓன்று பேஸ்புக். அந்நிறுவனம் பயனாளர்களை கவரும் வகையில் பல்வேறு வசதிகள் அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது.அந்த வகையில் பேஸ்புக்கில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது தான் பேஸ்புக் லைவ் வீடியோ வசதி. இதில் நாள்தோறும் பலர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில்,இங்கிலாந்து தலைநகர் லண்டனைச் சேர்ந்தவர் சாரா ஜேன் ஜங்ஸ்ட்ரம் (35).தனியார் விளம்பர நிறுவனம் ஒன்றில் இயக்குனராக பணியாற்றி வருகிறார்.கர்ப்பமாக இருக்கும் இவர், சமீபத்தில் தன்னுடைய வீட்டில் பீட்ஸா சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது திடிரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
அப்பொழுது தொடங்கி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுக்கும் வரையிலான சம்பவங்களை, சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் உள்ள ‘லைவ் வீடியோ’ வசதி வழியாக ஐந்து வீடியோக்களாக பகிர்ந்துள்ளார்.

கடந்த வருடம் முழுவதும் தாய்மை மற்றும் பிரசவம் குறித்து வீடியோ வலைப்பதிவுகளை வெளியிட்டு வந்ததாகவும், எனவே இந்த லைவ் வீடியோக்களை வெளியிடுவது என்பது இயல்பானது தான் என்றும் என்னைப் பொறுத்தவரை ஒரு தாயாக இருப்பது என்பது மிகவும் மதிப்புக்குரிய ஒரு விஷயமாக கருதுகிறேன். என்றும் சாரா கூறியுள்ளார்.

சாரா தனது பெண் குழந்தைக்கு ஈவ்லின் என்று பெயரிட்டுள்ளார். அவரின் இந்த வீடியோக்களை பேஸ்புக் வழியாக இதுவரை இரண்டு லட்சம் பேர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க