கோவையில் ஒன்பதாம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய சித்தப்பாவை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளார்.இதனையடுத்து அவரது பெற்றோர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அழைத்து சென்றுள்ளனர்.அப்போது சிறுமி ஐந்து மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிறுமியிடம் விசாரித்த பொழுது சிறுமியின் சித்தப்பா பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.இதனால் இந்த சிறுமி கர்ப்பம் அடைந்ததும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.புகாரின் பேரில் போலீசார் சிறுமியின் சித்தப்பாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து தொண்டாமுத்தூர் விசாரணை நடத்தி வருகின்றனர். 9ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை சித்தப்பாவே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியது கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு