• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ப்ரோசோன் மால் 5ஆம் ஆண்டு விழா கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைப்பு

July 23, 2022 தண்டோரா குழு

கோவை சரவணம்பட்டி ப்ரோசோன் மால் 5ஆம் ஆண்டு விழா கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கிவைத்தார்.

கோவை சரவணம்பட்டியில் மிக பிரம்மாண்டமாக இயங்கி வரும் ப்ரோசோன் மாலின் 5ஆம் ஆண்டு விழா.ஜூலை 22ம் தேதி மிக சிறப்பாக தொடங்கியது.

5ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு விருந்தினராக கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து விஜய் தொலைக்காட்சி புகழ் சூப்பர் சிங்கர்ஸ் ஆனந்த் அரவிந்தாக் ஷன் நித்யஸ்ரீ மற்றும் யூடியூபர்ஸ் ஒர்க்கர்ஸ் குழுவினரின் இன்னிசை மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. 5ம் ஆண்டு தொடக்க விழாயை முன்னிட்டு 70 க்கும் மேற்பட்ட பிராண்டுகள் ப்ளாட் 50 சதம் சிறப்பு சலுகை வழங்குகின்றன.

இச்சிறப்பு சலுகை ஜூலை 24 வரை மட்டுமே.23ம் தேதி அன்று மாலை விஜய் தொலைக்காட்சி புகழ் அறந்தாங்கி நிஷா, சூப்பர் சிங்கர் தன்யஸ்ரீ மற்றும் கௌசிக் ஆகியோரின் கலை மற்றும் பொழுபோக்கு நிகழ்ச்சிகளும் புட்லூஸ் குழுவினரின் பேஷன் சோ நடைபெற்றது.ஜூலை 24ம் தேதி மாலை சிறப்பு நிகழ்ச்சியாக விஜய் தொலைக்காட்சி பிரபலம் புகழ் மற்றும் மதுரை முத்து ஆகியோரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

பிரோசோன் மாலின் சார்பில் பொதுமக்கள் பங்கு கொண்டு விழாவை சிறப்பிக்குமாறும் இவ்விழாக்கான சிறப்பு சலுகையான 50 சதம் பிளட் சேல்லை பயன்படுத்திக் கொள்ளுமாறும் பிரோசோன் மாலின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் படிக்க