• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேங்க் ஆப் பரோடா வங்கியில் கிழிந்த மற்றும் பழைய நோட்டுகள் மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணை

July 19, 2022 தண்டோரா குழு

கோவை பேங்க் ஆப் பரோடா வங்கியில் கிழிந்த மற்றும் பழைய நோட்டுகள் சுமார் மூன்று கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 400 ரூபாய் மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டனர்.

கோவை நஞ்சப்பா சாலையில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியில் இருந்து 3.1 2022 அன்று கோவையிலிருந்து கிழிந்தமற்றும் நோட்டுகளான 2000,500,200,100 ரூபாய் என 70 கோடியே 40 லட்சம் ரூபாயை ஆர் பி ஐ க்கு அனுப்பி உள்ளனர். அப்போது ஆர்பிஐ 2 கோடியே 83 லட்சத்து 49 ஆயிரத்து 800 ரூபாய் குறைவாக உள்ளது என குறிப்பிட்ட வங்கி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து கடந்த ஜனவரி 8 ஆம் தேதி கோவை மண்டல அலுவலகத்தில் இருந்து நஞ்சப்பா சாலையில் உள்ள வங்கியில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது அப்போது கூடுதலாக 45 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் குறைவாக உள்ளதை கண்டறிந்தனர். மொத்தமாக 3 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 400 ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பதை கண்டறிந்தனர் இதனையடுத்து கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி பேங்க் ஆப் பரோடா மண்டல அதிகாரி காகடை சிபிஐக்கு மோசடி தொடர்பாக புகார் ஒன்றை அளித்தார்.

இந்த புகாரில் வங்கி ஊழியரக்ளான செல்வராஜன் ,ராஜன் ஜெய்சங்கர் கனகராஜ் ஸ்ரீகாந்த் மற்றும் அடையாளம் தெரியாத மற்றொரு நபர் என 6 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல சிபிஐ அதிகாரிகள் நஞ்சப்பாசாலையில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதில் காவலாளியான கனகராஜ் மோசடிக்கு உடந்தையாக இருந்தத்தும் கண்டறியப்பட்டுள்ளது.

கிழிந்த நோட்டு விவகாரத்தில் மொத்தம் 3 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 400 ரூபாய் மோசடி செய்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க