கோவை மாவட்டத்தில் திருச்சி சாலை சுங்கம் பகுதியில் மேம்பாலத்தை முதல்வர் முக.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
அம்மேம்பாலத்தில் மேம்பாலம் திறந்த அன்றைய தினமே ஒருவர் விபத்தில் உயிரிழந்தார். அதனையடுத்து சுங்கம் சந்திப்பு உக்கடம் வளைவில் ஒருவர் கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனை தொடர்ந்து விபத்துகளை குறைப்பதற்கு மேம்பாலத்தில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டது.
இருப்பினும் இன்று இரு சக்கர வாகனத்தில் வந்த ஆனந்த் குமார்(42) என்பவர் சிங்காநல்லூர் செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்து மேம்பால தடுப்பு சுவறில் மோதி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
இந்நிலையில் விபத்து நடந்த இடத்தில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மற்றும் போக்குவரத்து புலனாய்வு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு