• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சீட்டு கம்பெனிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி விளக்கக் கோரி வேண்டுகோள்

July 13, 2022 தண்டோரா குழு

சீட்டு கம்பெனிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி,சீட்டு கம்பெனிகளால் பயன்பெறும் பொதுமக்களுக்கு தான் பெரும் சுமையாக அமையும் எனவும்,வரியை முழுமையாக தளர்த்த வேண்டும் என கோவை மாவட்ட சீட்டு கம்பெனிகள் சங்கத்தினர் தெரவித்துள்ளனர்.

கோவை மாவட்ட சீட்டு நிதி நிறுவன சங்கத்தின் சார்பாக கோவை பிரஸ் கிளப் அரங்கில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சீட்டு கம்பெனி சங்க தலைவர் கிருஷ்ணபாரதி,மற்றும் கோவை மாவட்ட சீட்டு கம்பெனி சங்க நிர்வாகிகள் ராஜ் குமார், செல்லக்கண்ணு மற்றும் மகேஷ் பாபு ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.

அப்போது, பொருளாதார சேவையை செய்து வரும் சீட்டு கம்பெனிகள் நடத்தும் சீட்டு நிதியங்களின் மீதான ஜி.எஸ்.டி. வரியை அரசு 18 சதவிகிதமாக உயர்த்தி இருப்பதால், இந்த ஜிஎஸ்டி வரி உயர்வு முழுவதுமாக பொதுமக்களை மட்டுமே பாதிக்கும் எனவும்,வங்கிகளில் நிதி உதவி கிடைக்கப்பெறாத சிறுபான்மை மக்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் தங்களுடைய தொழில் துவங்குவதற்கும் தொழிலை மேம்படுத்துவதற்கும் சீட்டு கம்பெனிகளில் சேர்ந்து தங்களது பொருளாதார தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

இந்நிலையில் இது போன்ற வரி உயர்வால், பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படும் நிலை உள்ளதால்,வரி விதிப்பை , முழுவதுமாக நீக்க வேண்டும்..அங்கீகாரம் பெறாத சீட்டு கம்பெனிகளில் முதலீடு செய்பவர்களுக்கு இந்த ஜி.எஸ்.டி. வரி கிடையாது..ஆனால் அவர்களின் பணத்திற்கு உத்தரவாதம் இருக்காது ஆகவே அங்கீகாரம் பெற்ற சீட்டு கம்பெனிகளுக்கு இந்த ஜி.எஸ்.டி. வரி உயர்வை முழுவதுமாக தளர்த்த வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும் படிக்க