• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டோமினோ முறையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஜெம் மருத்துவமனை சாதனை

July 12, 2022 தண்டோரா குழு

தமிழகத்திலேயே முதல் முறையாக வளர் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளியின் கல்லீரலை மற்றொருவருக்கு மாற்றியமைத்து கோவை ஜெம் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

கோவை ராமநாதபுரத்தில் ஜெம் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு அரியவகை வளர் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட கணேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக வந்துள்ளார். கணேஷ் குடும்பத்தார் அவருக்கு கல்லீரலை தானமாக வழங்க முன் வந்தனர். ஆனால், கணேஷ்-ன் கல்லீரல் ஆரோக்கியமாக இருப்பதை அறிந்த மருத்துவர்கள் அதனை மற்றொரு நோயாளிக்கு மாற்றி அமைத்துள்ளனர்.

ஒரே நேரத்தில் மூன்று நபர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யும் இந்த முறை டோமினோ கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை என்று அழைக்கப்படும் நிலையில், இவ்வகை அறுவை சிகிச்சை இந்தியாவிலேயே இரண்டு முறையே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் முதல் முறையாக ஜெம் மருத்துவமனை இத்தகையை அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளது.

இந்த அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் விஜய் ஆனந்த், சாமிநாதன் சம்பந்தம் குழுவினர் வெற்றிகரமாக செய்துள்ளனர்.

இதுகுறித்து ஜெம் தலைவர் பழனிவேல் கூறுகையில்,

“வளர் சிதைவு கோளாறு காரணமாக பாதிக்கப்பட்ட ஒருவரது கல்லீரலை மற்றொருவருக்கு பொறுத்தும் முன்பு அவருக்கு அந்த கல்லீரல் தகுதியானதாக உள்ளதா என்று ஆய்வு செய்து அதன் பின்னர் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் எந்த வித பாதிப்பும் ஏற்படாது. அறுவை சிகிச்சை மேற்கொண்ட இருவரும், கல்லீரல் தானம் வழங்கிய ஒருவரும் தற்போது நல்ல நிலையில் உள்ளனர். தமிழகத்திலேயே முதல் முறையாக இந்த அறுவை சிகிச்சையை எங்கள் மருத்துவக்குழு செய்தது எங்களுக்கு பெருமையளிக்கிறது.” என்றார்.

மேலும் படிக்க