• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலெக்டர் கலந்துரையாடல் ‘போலாம் ரைட்’ நிகழ்ச்சி

July 11, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் குருடம்பாளையம் ஊராட்சியில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் ஒரு பகுதியாக ‘போலாம் ரைட்’ நிகழ்ச்சி ஆட்சியர் சமீரன் தலைமையில் நடைபெற்றது. இதில் அவர் தொண்டாமுத்தூர் அரசுப்பள்ளியில் பயிலும் 50 மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சமீரன் பேசும்போது தெரிவித்ததாவது:

நான் முதல்வன் திட்டத்தின் கீழ், போலாம் ரைட் என்னும் நிகழ்ச்சி இதுவரை 7 முறை நடைபெற்றுள்ளது. தற்போது 8-வது நிகழ்வாக தொண்டாமுத்தூர் அரசுப்பள்ளியில் பயிலும் 50 மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அண்ணா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், வேளாண்மை பல்கலைக்கழகம் ஆகியவற்றை சார்ந்த 40 கல்லூரிகள் 150 அரசுப்பள்ளிகளை தத்தெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் வருகின்ற இரண்டு வருடங்களுக்கு இப்பள்ளிகளை தத்தெடுத்து அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள்‌ படிப்பில்‌ மட்டுமல்லாது வாழ்க்கையிலும்‌ வெற்றியாளராகும்‌ வகையில்‌ பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. 11 மற்றும் 12ம் வகுப்பானது முக்கியமான வகுப்பாகும். இதில் பெறுகின்ற மதிப்பெண்கள் உங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பின்னர் குருடம்பாளையம் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரித்தல், கழிவு செய்யப்பட்ட காய்கறியிலிருந்து உரம் தயாரித்தல் உள்ளிட்டவைகள் குறித்து செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, குருடம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ரவி, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க