• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பியூஸ் போன அனுராக் தாகூர்: தலைவர் பதவியில் இருந்து நீக்கம்!

January 2, 2017 tamil.smayam.com

லோதா குழு பரிந்துரை வழக்கில் தீர்ப்பளித்த சுப்ரீம்கோர்ட் பி.சி.சி.ஐ., தலைவர் அனுராக் தாகூரை நீக்கி உத்தரவிட்டது.

இந்திய கிரிக்கெட் போர்டில் (பி.சி.சி.ஐ.,) சீர்திருத்தம் செய்வது குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி லோதா குழு பரிந்துரைகளை வழங்கியது. இதை நடைமுறைப்படுத்தாமல், பி.சி.சி.ஐ., காலக்கெடு நீட்டிக்கொண்டே இருந்தது. குறிப்பாக நிர்வாகிகளின் அதிகபட்ச வயது 70 ஆக குறைக்கப்பட வேண்டும், மாநிலத்துக்கு ஒரு ஓட்டு உள்ளிட்ட அம்சங்களுக்கு பி.சி.சி.ஐ., எதிர்ப்பு தெரிவித்தது.

இவ்வழக்கை கடந்த டிசம்பர் 16ல் விசாரித்த சுப்ரீம்கோர்ட் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது. தணிக்கை அதிகாரி நியமனம் குறித்த ஐ.சி.சி.,யிடம் பி.சி.சி.ஐ., தலைவர் அனுராக் தாகூர் விளக்கம் கேட்டதாக தெரிகிறது. இந்நிலையில், இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. இதைவிசாரித்த சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள், சட்டம் அனைவருக்கும் பொதுவானது தான்.

கடந்த ஜூலை 18ல் பிரபித்த உத்தரவை பெயரளவிலேயே பி.சி.சி.ஐ., ஏற்றுக்கொண்டது. ஆனால் செயல்படுத்தவில்லை. சுப்ரீன் கோர்ட்டின் உத்தரவை மதிக்க வேண்டியது கடமையாகும். இல்லை என்றால் அதற்கான விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டும். அதனால் அதை பின்பற்றாத பி.சி.சி.ஐ., தலைவர் அனுராக் தாகூர், மற்றும் பி.சி.சி.ஐ., செயலாளர் அஜெய் ஷர்கே அகியோர் நீக்கப்பட வேண்டும். என தெரிவித்தனர்.

இதையடுத்து பி.சி.சி.ஐ., யின் புது நிர்வாகிகளை தேர்வு செய்ய பாலி நாரிமன், கோபால் சுப்பிரமணியன் ஆகியோரை நியமித்து சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பிஷன் சிங் ஆதரவு:

சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி ஆதரவு தெரிவித்துள்ளார். கிரிக்கெட் தற்போது தான் சரியான பாதைக்கு திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க