• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிஎம்ஜே ஜுவல்ஸ்-ன் முதல் ஷோரூம் கோவையில் தொடக்கம்!

July 5, 2022 தண்டோரா குழு

பிஎம்ஜே ஜுவல்ஸ், கோயம்புத்தூரின் ஆர்.எஸ்.புரத்தில் அதன் முதல் ஷோரூமை தொடங்கியிருக்கிறது.

தென்னிந்தியாவில் பிஎம்ஜேயின் 24வது ஷோரூமாகவும்,தமிழ்நாட்டில் முதலாவது ஷோரூமாகவும் திகழும் இது இந்த பிராண்டின் தீவிர விரிவாக்கத் திட்டத்தின் ஒரு அங்கமாக அமைகிறது.பிஎம்ஜே நிறுவன அலுவலர்களும் மற்றும் அதனை நேசிக்கிற வாடிக்கையாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதன் ஆபரணத்தொகுப்பில் பாரம்பரிய, நவீன மற்றும் வெவ்வேறு பிராந்தியங்களுக்கே உரிய தனித்துவமான ஆபரண வடிவமைப்புகளில் எண்ணற்ற நகைகள் இடம்பெற்றுள்ளன.
பிஎம்ஜே ஜுவல்ஸ், காலத்தைக் கடந்து நிலைக்கக்கூடிய,அழகான வடிவமைப்புகளுக்கு மிகப் பிரபலமானதாகும்.

புதிய ஷோரூம் குறித்து பிஎம்ஜே ஜுவல்ஸ்-தமிழ்நாடு-ன் பிசினஸ் ஹெட் செந்தில் குமார் நடராஜன் கூறியதாவது,

இந்த ஷோரூமுக்கு வருகை தரும் அனைத்து நபர்களும் ஒரு அற்புதமான அனுபவத்தை பெறுவார்கள் என்று எங்களால் வாக்குறுதி வழங்க முடியும்.இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள டிசைன்கள் அனைத்துமே மிக நேர்த்தியான தரத்தில் கட்டுப்படக்கூடிய மிதமான விலைகளில் கிடைக்கின்றன.ஒவ்வொரு வருகையாளரும் எமது சமீபத்திய மற்றும் அற்புதமான வடிவமைப்புகளின் அழகில் மயங்கி அவற்றை நேசிக்க தொடங்குவதை தவிர்க்க இயலாது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்றார்.

மேலும் படிக்க