கோவை பிபிஜி கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 24ஆண்டுகள் கழித்து தங்களது ஆசிரியர்களை கவுரவித்து நெகிழ்ச்சியூட்டினர்.
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பிபிஜி பிசியோதெரபி கல்லூரியில் யுக்தா 2022 எனும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் 1998ஆம் ஆண்டில் படித்த மாணவர்கள் முதல் தற்போது வரை உள்ள மாணவர்கள் வரை என 400க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பிபிஜி குழுமம் தலைவர் தங்கவேலு, தாளாளர் சாந்தி தங்கவேலு, அறங்காவலர் அக்ஷ்ய், கல்லூரி முதல்வர் சிவக்குமார் ஆகியோருக்கு மாலை அணிவித்து முன்னாள் மாணவர்கள் கவுரவித்தனர்.இதே கல்லூரியில் பயின்று தற்போது பிசியோதெரபி துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் முன்னாள் மாணவர்களான ஜெய்சன்,ரஹ்மான்,தாஷ்பிரகாஷ்,மணிமுத்து,அம்பிகா, தெய்வேந்திரன், ஆகியோர் விழாவில் கவுரவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் 2002 ஆம் ஆண்டு பயின்ற மாணவர்கள் கல்லூரியின் சிஏஓ தக்ஷணாமூர்த்திக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.நிகழ்ச்சிக்கு முன்பாக முன்னாள் மாணவர்களுக்கான கபடி, கைப்பந்து, கிரிக்கெட் ஓட்டப்பந்தையம் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது