• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் ஆட்சியர் சந்திப்பு

June 24, 2022 தண்டோரா குழு

கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையின்‌ மூலம்‌ ஊனமுற்ற மற்றும்‌ மாற்றுத்திறனுள்ள குழந்தைகளுக்கு முற்றிலும்‌ இலவசமாக சிகிச்சை அளிக்கும்‌ திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட குழந்தைகளை கலெக்டர் சமீரன் பார்வையிட்டு அக்குழந்தைகளின் நலன் குறித்து விசாரித்தார்.

கோவை மாவட்டம்‌ மற்றும்‌ அதை சுற்றியுள்ள பல்வேறு அரசு பள்ளிகளில்‌ நடத்தப்பட்ட முகாம்கள்‌ மூலம்‌ நோயாளிகள்‌ கண்டறியப்பட்டனர்‌. பல்வேறு குறைபாடுகள்‌ மற்றும்‌ ஊனமுற்ற 20 குழந்தைகள்‌ தனியார் மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டனர்‌. குழந்தைகள்‌ எலும்பியல்‌ துறையில்‌ பயிற்சி பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர்களால்‌ குழந்தைகள்‌ விரிவாக மதிப்பீடு செய்யப்பட்டனர்‌.

மேலும்‌ அவர்கள்‌ அனைவருக்கும்‌ அறுவை சிகிச்சை நிபுணர்கள்‌ குழுவால்‌ தேவையான அறுவை சிகிச்சை முறைகள்‌ மேற்கொள்ளப்பட்டன.இந்த குழந்தைகளுக்கு பெருமூளை வாதம்‌, பரம்பரை சென்சரிமோட்டர்‌ நியூரோபதி, ஆர்த்ரோகிரிபோசிஸ்‌ போன்ற குறைபாடுகள்‌ கண்டறியப்பட்டன. இவர்களுக்கு மென்மையான திசு மறு சமநிலை, தசைநார்‌ பரிமாற்றம்‌ மற்றும்‌ சிக்கலான ஆஸ்டியோடோமிகள்‌ போன்ற பல்வேறு அறுவை சிகிச்சைகள்‌ சுமார்‌ ரூ.13 லட்சம் மதிப்பில் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அனைத்து குழந்தைகளுடன்‌ கலந்துரையாடி குழந்தைகளின் நலன் குறித்து விசாரித்தார். மேலும் அக்குழந்தைகளுக்கு ஒவியங்கள் அடங்கிய புத்தகங்கள் மற்றும் க்ரையன்ஸ்களை வழங்கினார்.

மேலும் படிக்க