• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குட்கா விற்பனையில் காவல் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பின் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்

June 23, 2022 தண்டோரா குழு

குட்கா பொருட்கள் விற்பனையில் காவல்துறையினருக்கு ஏதேனும் தொடர்பிருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

கோவை மாநகரில் குட்கா பொருட்களை தடை செய்வதற்காக நேற்று 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பள்ளிகள் அருகில் குட்கா பொருட்களை விற்பனை செய்த 23 பேரை கைது செய்துள்ளனர். 35 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். இது போன்று விற்பனையில் ஈடுபடுபவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.

இது போன்று விற்பனை எங்காவது நடைபெற்றால் பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கும் படி கேட்டுகொண்டார். மேலும் பள்ளி முதல்வர்கள் ஆசிரியர்களை அழைத்து இது பற்றிய விழிப்புணர்வை வழங்கியுள்ளதாக தெரிவித்தார். மேலும் பள்ளி அருகில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் போக்சோ தடுப்பு சட்டம் குறித்தும் எடுத்து கூறியதாக தெரிவித்தார்.

குட்கா விற்பனையில் காவல் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பின் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் ஒரு வார காலத்தில் 20க்கும் மேற்பட்ட கஞ்சா விற்பனையாளர்களின் வங்கி கணக்குகளை முடக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். இது குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

இரு சக்கர வாகன திருட்டு குறித்தும் தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும் கோவை மாநகரில் ஆட்டோ ஓட்டுநர்கள் கணக்கெடுப்பு எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். தனியார் பேருந்து ஊழியர்கள் ரகளையில் ஈடுபடுவதாக சில செய்திகள் வந்துள்ளது என்றும், இரவு நேரத்தில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த உள்ளதாகவும் கூறினார். காந்திபுரம் பகுதியில் நேற்று நடைபெற்ற சம்பவத்தில் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், தெரிவித்தார்.

தனியார் பேருந்துகளில் அதிகளவு ஊழியர்கள் இருப்பதாக தெரிவித்தற்கு பதிலளித்த அவர், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த காவல்துறை தரப்பில் இருந்து போதிய உதவிகள் செய்வதாகவும் அப்படியிருக்க சாலைகளில் வாகன ஓட்டிகளிடம் முறைகேடாக நடந்து கொண்டால் வழக்கு பதிவு செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க