• Download mobile app
08 Jan 2026, ThursdayEdition - 3620
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நேற்று இடைநீக்கம், இன்று தடை நீக்கம் உ.பி. அரசியலில் திடீர் திருப்பம்!

December 31, 2016 தண்டோரா குழு

உத்தரப் பிரதேசத்தில் திடீர் திடீரென்று அரசியல் நிகழ்வுகள் நடக்கின்றன. மாநில முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும் அவரது தந்தையும் சமாஜவாதி கட்சியின் தலைவருமான முலாயம் சிங் யாதவுக்கும் இடையிலான பனிப்போர் திடீரென்று வெள்ளிக்கிழமை பூதாகரமானது.

மாநிலத் தேர்தலில் சமாஜவாதிக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்கள் பட்டியலை முலாயம் சிங் யாதவ் வெளியிட்டார். அதில், அகிலேஷின் ஆதரவாளர்கள் பெயர் எதுவும் இடம்பெறவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த முதலமைச்சர் அகிலேஷ் போட்டியாக தனது ஆதரவாளர்களான 35 பெயர்களை வேட்பாளர்களாக அறிவித்தார்.

இதையடுத்து, கோபமடைந்த முலாயம் சிங் யாதவ் தனது மகன் அகிலேஷ் யாதவ், கட்சியின் மூத்த தலைவர் ராம்கோபால் யாதவ் ஆகியோரைக் கட்சியிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்கினார்.
இதன் காரணமாக, கட்சியில் பிளவு ஏற்படும் சூழ்நிலை உருவானது.

இந்நிலையில் அகிலேஷ் தனது இல்லத்தில் ஆளும் கட்சி சட்டப் பேரவை உறுப்பினர்களின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அக்கூட்டத்தில் அகிலேஷுக்கு 150 பேர் ஆதரவு தெரிவித்தனர்.

இதனிடையில், அகிலேஷ் மீதான வெளியேற்ற நடவடிக்கையடுத்து, அவரது ஆதரவாளர்களுக்கும் முலாயம் சிங் யாதவ் ஆதரவாளர்களுக்கும் இடையில் உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் மோதல் நடைபெற்றன.

சம்பவம் குறித்து முலாயம் சிங் யாதவுக்கும் தகவல் கிடைத்தது.இதன் பின் விளைவாக, அகிலேஷ் யாதவ், ராம்கோபால் யாதவ் ஆகியோரை கட்சியிலிருந்து நீக்கிய நடவடிக்கையை முலாயம் சிங் யாதவ் திரும்பப் பெற்றுக் கொண்டார்.இதன் விளைவாக சமாஜவாதி கட்சியில் பிளவு தற்போது தவிர்க்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க