• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் தங்கத் தேர் இழுத்து சிறப்பு வழிபாடு

June 22, 2022 தண்டோரா குழு

நடிகர் விஜய் பிறந்த நாள் விழாவை, முன்னிட்டு,தளபதி விஜய் மக்கள் இயக்கம் கோவை மாநகர் இளைஞரணி சார்பாக முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நடிகர் வி்ஜய்யின் பிறந்தநாளை நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக தளபதி மக்கள் இயக்கம் கோவை மாநகர் இளைஞரணி சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகளுடன் தளபதி விஜய் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

முன்னதாக,கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோணியம்மன் கோவிலில் அவரது பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு,108 தேங்காய் உடைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.தொடர்ந்து, கோவை,காந்திபார்க் பகுதியில் உள்ள பாலதண்டாயுதபாணி முருகன் கோவிலில் அன்னதானம் நடைபெற்றது. பின்னர் மாலை தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாட்டு பூஜை நடைபெற்றது.

கோவை மாநகர் இளைஞரணி தலைவர் ராம்குமார் தலைமையில் நடைபெற்ற இதில் செயலாளர் ரமேஷ்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக இளைஞரணி மாவட்ட தலைவர் யுவராஜ் கலந்து கொண்டார்.இதில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு மேளதாளம் முழங்க தங்கத்தேரை இழுத்து தங்களது அபிமான நடிகர் விஜய் நீடுழி வாழ பிரார்த்தனை செய்தனர்.

இந்நிகழ்ச்சியில்,மாநகர் இளைஞரணி நிர்வாகிகள் குமார்,வசந்த்,கத்தி மணி, பாலாஜி,சரவணன் சுரேஷ்,செல்வ பாண்டி, கணேஷ்,வருண்,பாலாஜி, மணிகண்டன், மற்றும் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் பிரியமுடன் உண்ணி, பிரசன்னா, மணிகண்டன், எட்டிமடை பாலு, சமத்துவம் ரவி, மகேஷ், தினேஷ், செல்வம் ,பாபுராஜ், சூர்யா மற்றும் தெற்கு நகர இளைஞரணி நிர்வாகிகள் பைசல், அக்கீம்,முகமது அலி, குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க